Saturday, April 6, 2013

தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு வலியுறுத்தி லண்டனில் எழுச்சிப்பேரணி: டைரக்டர் பாரதிராஜா பங்கேற்பு

இலங்கை அரசின் மீது ஐ.நா. சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியும், தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பை நடத்த கோரியும், தமிழக மாணவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கவும் லண்டனில் எழுச்சிப்பேரணி நடந்தது. அங்குள்ள டிராபல்கர் சதுக்கத்தில் தொடங்கிய பேரணியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர். 
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு வலியுறுத்தி லண்டனில் எழுச்சிப்பேரணி: டைரக்டர் பாரதிராஜா பங்கேற்பு
பேரணியை கந்தையா ராஜமனோகரன் தொகுத்து வழங்குகிறார். அதில், டைரக்டர் பாரதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. எஸ்.ஜெயானந்தன்மூர்த்தி, தமிழ் இணையோர் அமைப்பை சேர்ந்த பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பேரணியில் டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:- 

'ஈழம் கிடைக்கும். இனி மேல் தமிழன் என்பவன் ஈழத்தமிழன், இந்தியத் தமிழன், மலேசியத் தமிழன், கனடாத்தமிழன் என பிரித்து பார்க்காதீர்கள். தமிழன் எல்லோரும் அவன் எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்' என்று தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் இல்லம் நோக்கி புறப்பட்டது. முடிவில் பேரணியில் இழுத்து செல்லப்பட்ட இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர் பிரிட்டோ வழங்கிய உரையின் ஒலிப்பதிவும், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஷ் தமிழகத்தில் இருந்து வழங்கிய உரையின் ஒலிப்பதிவும் இடம் பெற்றது.

No comments: