Monday, April 7, 2014

ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு சில குறிப்புகள்


தொய்வடைந்த கன்னங்களை இறுக வைக்க, டிப்ஸ் சொன்னது ஓ.கே! ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு... என்று காத்திருக்கும் உள்ளங்களுக்கான சில குறிப்புகள்... * தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வாருங்கள். ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும். * ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் `பேசியல் ஸ்ட்ரோக்' கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும். ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்துச் சாப்பிடுவது கன்னத்தை பொலிவாகக் காட்டும். * நல்லெண்ணெய் (அ) தேன் ஒரு டிஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி. * தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் மின்னும் கன்னம். * மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகளை துருவி ஜுஸ் எடுத்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு... கலர், பளபளப்புக் கூடும். * ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு வாஷ் பண்ணுங்கள். தேன், சருமத்தின் சுருக்கங்களைக் போக்கி, கன்னத்தை பளபளப்பாகும். * ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்... சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும். * முகத்துக்கு மஞ்சள்தூள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. அது சருமத்தை வறட்சியாக்கி, கன்னங்களைப் பொலிவிழிக்கச் செய்து விடும். * அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண்ணாததும், கன்னம் ஒட்டிப்போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண்டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் நட்ஸ், டிரை ப்ரூட்ஸ், நிறைய தண்ணீர் சேர்த்துக் கொண்டால் ப்ரெஷ் கன்னம் கிடைக்கும். எல்லாம் சூப்பர் இதற்கான டிப்ஸ் ஏதாவது... ப்ளீஸ்... என்பவர்களுக்கு... பால் - 1 டீஸ்பூன் வெண்ணை - 1 டீஸ்பூன் பார்லித்தூள் - 2 டீஸ்பூன் சிறிய கிண்ணம் ஒன்றில் இவை மூன்றையும் நுரை வருமாறு நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் க்ரீமை, முகம், கழுத்து, கண்களைச்சுற்றி... என எல்லாப் பகுதிகளிலும் பூசவும்... அரை மணி நேரம் கழித்து, வெது வெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். பிறகு பாருங்கள், கன்னம் வெண்மைப் பொலிவுடன், முகம் மினுமினுப்புடன் பிரசாசிப்பதை.

No comments: