Friday, April 4, 2014

ஜெ. வீட்டில் பறிமுதல் செய்தது


ஜெ. வீட்டில் பறிமுதல் செய்தது 914 பட்டுச்சேலை; 6,200 இதர சேலைகள் : அரசு வக்கீல் தகவல் தமிழக காவல் துறையில் வீடியோகிராபராக பணியாற்றி வரும் ராஜேந்திரன் கொடுத்துள்ள சாட்சியத்தில் வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட வழக்கில் குற்றவாளிகளாக இருப்போருக்கு சொந்தமான எண் 31ஏ, போயஸ் கார்டன், எண் 36 போயஸ் கார்டன் வீடு, சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, ஐதராபாத் திராட்சை தோட்டம், கொடைக்கானல் பங்களா, கொடநாடு தேயிலை தோட்டம், சென்னையில் உள்ள கிண்டி, தியாகராய நகர், அண்ணாநகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அரும்பாக்கம், பரமேஸ்வர்நகர், மந்தைவெளி. நுங்கம்பாக்கம், சாந்தோம், செய்யூர் உள்பட பல பகுதியில் உள்ள வீடு, பங்களா, அலுவலகங்கள், நமது எம்.ஜி.ஆர். ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் உள்பட பல இடங்களில் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதை படம் பிடித்துள்ளார். தங்கம்வெள்ளி பொருட்கள் குவியல்: குற்றவாளிகளுக்கு சொந்தமான வீடுகளில் தங்க, வைர ஆபரணங்கள், தங்கம், வெள்ளி குத்துவிளக்குகள், தங்கத்தால் தயாரிக்கப்பட்ட பூஜை பொருட்கள், விநாயகர் உள்பட சாமி சிலைகள், குங்குமச்சிமிழ், காமாட்சியம்மன் விளக்கு, பல சூட்கேஸ்கள், பல பீரோக்கள், விலை உயர்ந்த கட்டில், மெத்தை, தலையணை, நாற்காலிகள், டைனிங் டேபிள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள், விலை மதிப்பில்லாத டி.வி., வி.சி.ஆர்., வி.சி.டி., டி.வி.டி. பிளேயர்கள் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. பட்டு சேலை, ஆடைகள்: சென்னை எழும்பூரில் உள்ள கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாளர் செங்கல்வராயன் கொடுத்துள்ள சாட்சியத்தில், வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா வீட்டில் தமிழக லஞ்சஒழிப்பு போலீ சார் பறிமுதல் செய்த பட்டு சேலைகளை மதிப்பீடு செய்யும்படி என்னிடம் கூறினர். அதையேற்று எனது கீழ் பணியாற்றிய ஊழியர்களுடன் இணைந்து ஆய்வு செய்தேன். அதில், போலீசார் பறிமுதல் செய்திருந்த 914 பட்டு சேலைகளின் மதிப்பு ரூ.61 லட்சத்து 13 ஆயிரத்து 700 என்றும், மேலும் பறிமுதல் செய்திருந்த 6 ஆயிரத்து 195 பிற உடுப்புகளின் மதிப்பு னீ27 லட்சத்து 08 ஆயிரத்து 720 என்று மதிப்பீடு செய்தோம். சேலை உள்பட ஆடைகளின் மொத்த மதிப்பு ரூ.88 லட்சத்து 22 ஆயிரத்து 420 என்பதை புள்ளி விவரத்துடன் சாட்சியம் அளித்துள்ளதை பவானிசிங் தெளிவாக எடுத்துரைத்தார். அதை தொடர்ந்து விசாரணையை இன்று நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments: