Sunday, April 20, 2014

அதிக வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்: பி.டி.அரசகுமார்


ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவருமான பி.டி.அரசகுமார் கடலாடி ஒன்றிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 45 கிராமங்களில் தீவிர சூறாவளி பிரசாரம் மேற் கொண்டார். கடலாடி அருகே உள்ள கருங்குளம், சமத்துவபுரம், தேவர்குறிச்சி, ஏனாதி கிராமம், எஸ்.பி.கோட்டை, கிடாத்திருக்கை, பொதிகுளம், ஆப்பனூர், புனவாசல் ஆகிய கிராமங்களுக்கு திறந்த பிரசார வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் குழவையிட்டும் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் கூறியதாவது:– ஆப்பனூர் கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மனின் பூரண நல்லாசியாலும், கோவிந்தராஜத்தேவரின் உத்வேகத்தாலும் நான் இங்கு பாராளுமன்ற வேட்பாளராக களம் கண்டுள்ளேன். நான் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் திரளாக ஒன்று கூடி பேசி எனக்கு வாக்களிப்பதாக முடி வெடுத்துள்ளார்கள். மேலும் இது ஒரு மவுன புரட்சியாகும். லட்சக் கணக்கான மக்கள் என்னை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுள்ளது. காரணம் பசும்பொன் தேவரின் அரசியல் பாதையில் அடியெடுத்து செல்லும் எனக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இது திராவிட காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. நான் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் மட்டும் அல்ல, அனைவருக்கும் பொதுவானவன். மக்கள் தங்களுடைய குறைகளை என்னிடம் கூறுவதற்கு மக்கள் பிரதிநிதியாக என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திட மோதிரம் சின்னத்தில் வாக்களித்திட வேண்டுகிறேன் என்றார். பின்னர் கடுகுசந்தை பகுதியில் உள்ள ம.தி.மு.க. பிரமுகர் நித்யானந்தம் அக்கட்சியில் இருந்து விலகி தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். வழிநெடுகிலும் உற்சாகமான வரவேற்பு வேட்பாளருக்கு கொடுக்கப்பட்டது. அவருடன் நித்யானந்தம், கோவிந்தராஜத்தேவர் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

No comments: