Saturday, April 5, 2014

பசும்பொன் வழக்கறிஞர் சங்கம்


கடந்த இரண்டாண்டுகளாக தேவரினத்தின் மீது தலித்துகளால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் இதுவரை பொன்னயாபுரத்தில் இருவர் கல்லால் அடித்துக்கொலை பாம்புவிழுந்தானில் ஒருவர் அடித்துக்கொலை மதுரை சிந்தாமணி அருகே பெட்ரோல் குண்டு வீசி புளியங்குளம் இளைஞர்கள் எழுவர் படுகொலை படுகாயமடைந்த பலருக்கு நடைபிண வாழ்க்கை திருப்பாசேத்தி போலீஸ் என்கவுண்டரில் இருவர் சுட்டுக்கொலை போலீசால் ஒருவர் அடித்துக்கொலை தற்போது மடப்புரத்தில் ஒருவர் அடித்துக்கொலை என இதுவரை எமது இனத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் 14 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது . இவையனைத்தும் தேவரின மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பாதுகாப்பற்ற சூழலை உணர்த்துகிறது . ஒரு பெரும்பான்மை சமூகத்தை அழித்தொழிக்கும் வேலையை ஒரு தீவிரவாத கும்பல் திட்டமிட்டு முன்னெடுத்து வருவதாக இச்சம்பவங்களின் பின்னணி குறித்து வரும் தகவல்கள் உதிரத்தை உறையவைப்பதாக உள்ளது . இப்படுகொலைகளை சாதாரண கொலை வழக்குகளாக தற்போது விசாரிக்கப்பட்டு வருவது மிகுந்த அதிர்ச்சியளிகிறது .எனவே இதன் பின்னணி குறித்து சி .பி .ஐ.விசாரணை வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என பசும்பொன் வழக்கறிஞர் சங்கம் முடிவு செய்துள்ளது . இவ்வழக்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் சமூக அமைப்புகள் இயக்கங்கள் அரசியல் கட்சிகள் தங்களை மனுதாரராக இணைத்து கொண்டால் இவ்வழக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படும் . எனவே தங்கள் கருத்துகளை -தொடர்பு முகவரிகளை உள்டப்பியில் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளுகிறோம் . நாளையே இவ்வழக்கு சம்பந்தமான பூர்வாங்க அடிப்படை பணிகள் தொடங்குகிறது . பசும்பொன் வழக்கறிஞர் சங்கம்

No comments: