Wednesday, April 2, 2014

என் மீது இவ்வளவு மரியாதை வைச்சிருப்பாங்கன்னு முன்கூட்டியே தெரியாமல் போயிருச்சு... கார்த்திக்


நாடாளும் மக்கள் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மதுரையில் களமிறங்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் நாங்கள் தீர்மானிக்கிற சக்தியாக இருப்போம் என்ற சபதத்துடன் தேர்தல் களத்தில் குதித்தார் கார்த்திக். இந்நிலையில் காங்கிரஸின் கூட்டணி வேட்பாளராக கார்த்திக் அறிவிக்கப் படப் போவதாக செய்திகள் உலா வந்தன. தற்போது அத்தகவலை உண்மை என நிரூபிப்பது போல் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் கார்த்திக். மேலும், தன்னுடைய அருமைகளைப் புரிந்து வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் இத்தனை நாட்கள் பேசாமலிருந்தது எவ்வளவு பெரிய தவறு என வேதனை தெரிவித்துள்ளார் கார்த்திக். இது தொடர்பக 'தி இந்து'வுக்கு கார்த்திக் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- அழைப்பு... டெல்லியிலிருந்து அகமது படேலிடமிருந்து அழைப்பு வந்தது. காங்கிரஸ் தலைவர்கள் என் மீது இவ்வளவு மரியாதை வைச்சிருப்பாங்கன்னு முன்கூட்டியே தெரியாமல் போயிருச்சு. நம்மைப் பற்றி ரிசர்ச்.... 129 வருட பாரம்பரியம் கொண் டது காங்கிரஸ் கட்சி. டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் நம்மைப் பற்றி முழுமையாக ரிசர்ச் பண்ணி வைச்சிருக்காங்க. நியாயமான காரணங்கள்... எங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியாததுக்கு அவர்கள் சொன்ன காரணங்கள் நியாயமானது. ஞாயிற்றுக் கிழமை காலை எனது வீட்டுக்கு ஞானதேசிகன் வந்தார். முக்கால் மணி நேரம் பேசினார். முன்னாடியே பேசியிருக்கணும்... காங்கிரஸ் கட்சியுடன் முன்கூட்டியே நான் பேச்சுவார்த்தை நடத்தாதது நான் செய்த மிகப் பெரிய தவறு என்பதை இப்போது உணர்கிறேன். இதுவும் எங்களுக்கு ஒரு பாடம். தியாகங்கள்... காங்கிரஸ் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நிறைய உழைத்திருக்கிறது; நிறைய தியாகங்களை செய்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் எதிரிக் கட்சிகளாய் செயல்பட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கிவிட்டன. இல்லாவிட்டால் இன்னும் பல நல்ல திட்டங்களை காங்கிரஸ் தந்திருக்கும். நான் பட்ட பாடு இருக்கே... அப்பப்பா.... காங்கிரஸ் தலைவர்களிடம் நிஜம் இருக்கு; எதார்த்தம் இருக்கு. இதை நான் இந்த இடத்தில் சொல்லியே ஆகணும். கடந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்துவிட்டு நான் பட்டபாடு எனக்குதான் தெரியும். காங். வாழ்த்து... கன்ஃபார்ம் ஆன பின்னாடி சொல்லலாம்னு இருந்தேன். ஞாயிற்றுக்கிழமை இரவுதான் டெல்லியிலிருந்து போன் செய்து 'மதுரை தொகுதி உங்களுக்கு ஒதுக்கி இருக்கு. வாழ்த்துகள்; ஜெயிச்சுட்டு வாங்க'ன்னு சொன்னாங்க. அதிகாரப்பூர்வ அறிவிப்பு... இருந்தாலும் தமிழக காங்கிரஸ் தரப்பிலிருந்து முறைப் படி அறிவிக்கட்டும்னு காத் திருக்கிறேன். நல்ல நட்பு.... எங்களுக்கு மதுரை தொகுதி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், நல்ல மனிதர்களுடைய நட்பு கிடைத் ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். வெற்றிக்குப் பின் கழட்டி விடும் கட்சிகள்... நினைத்ததை அடைவதற்காக கூட்டணி அமைத்துவிட்டு இலக்கை அடைந்ததும் கூட்டணிச் சக்கரத்தை கழற்றி விடுவது என்ன சார் கூட்டணி? என்னைக் காப்பியடித்த கட்சிகள்.... 2011 தேர்தலுக்கு நான் ஒரு தேர்தல் அறிக்கை தயாரித்து முக்கிய அதிகாரிகளுக்கு அனுப்பினேன். அதை முக்கிய அரசியல் கட்சிகள் காப்பியடித்து தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்த்துவிட்டனர்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அழகிரியின் ஆதரவு.... அப்போ இதை மனதில் வைத்துத் தானோ என்னவோ சமீபத்தில் அழகிரியிடம் போன் செய்து அவரை பாராட்டினார் போலும் கார்த்திக். கடந்த சில வாரங்களுக்கு முன் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப் பட்ட அழகிரிக்கு திடீரென போன் செய்துள்ளார் கார்த்திக். அண்ணே... ரொம்ப தேங்க்ஸ் அப்போது, மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட பிரதமரிடம் வலியுறுத்தியதற்கு அழகிரிக்கு நன்றி தெரிவித்தார் கார்த்திக். மேலும், ‘நான்கூட சும்மா சம்பிரதாயமாக பேசுவாரோ என்று நினைத்தேன். ஆனா, உணர்ச்சிவசப்பட்டு பேசினாரு. அவர் நீண்ட காலமாக என் நண்பராக, விசுவாசியாக இருப்பவர்' என கார்த்திக்கை அழகிரி பாராட்டியது குறிப்பிடத்தக்கது..

No comments: