Wednesday, January 1, 2014

புறம்போக்கு படத்தில் ஆர்யா - விஜய்சேதுபதியுடன் இணையும் ஷாம்

புறம்போக்கு படத்தில் ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பது ஏற்கனவே வெளிவந்த தகவல். ஆனால் இப்போது புதிதாக அந்த படத்தில், ஆர்யா–விஜய் சேதுபதியுடன் ஷாம் இணைகிறார். அதுவும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம். ஏற்கெனவே ஷாம், எஸ்.பி.ஜனநாதனின் ‘இயற்கை’ படத்திலும் நடித்துள்ளார். படத்தில் மூன்று பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் நாயகியாக நடிப்பது என்னவோ ஒருவர் மட்டுமே. படத்தின் நாயகியாக கார்த்திகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படப்பிடிப்பு ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று குலுமனாலியில் தொடங்குகிறது. தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பிகானீர், பொக்ரான், ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது. எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, இயக்கும் புதிய படம் ‘புறம்போக்கு’ என்பது குறிப்பிடத்தக்கது. .

No comments: