Tuesday, January 21, 2014

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆஸ்பத்திரியில் அனுமதி

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன் காலத்தில், முன்னணி கதாநாயகனாக இருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். ‘பராசக்தி, ‘மணிமகுடம், அல்லி, தைபிறந்தால் வழிபிறக்கும், கைகொடுத்த தெய்வம், நானும் ஒரு பெண்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். 86 வயதான எஸ்.எஸ்.ராஜேந்திரன், கடந்த சில நாட்களாக சளித்தொல்லையினால் அவதிப்பட்டு வந்தார். சளி அடைத்துக்கொண்டதால், அவரால் சாப்பிட முடியவில்லை. நேற்று முன்தினம் மயங்கிய நிலையில், சென்னை டிரஸ்ட்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments: