Wednesday, January 8, 2014

பாலா படம் எப்போது?


இயக்குனர் பாலா எந்த படத்தை துவங்கினாலும், அதை தலைமேல் வைத்து கொண்டாட உலகம் முழுவதுமிருக்கிற சினிமா ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். பரதேசி படத்திற்கு பின்பு சசிகுமார் நடிக்கும் படத்தைதான் துவங்கப் போகிறார் பாலா. இந்த அறிவிப்பு முறையாக வருவதற்கு முன்பே ஊடகங்களில் கசிந்துவிட்டது. இம்மாத துவங்கத்தில் படப்பிடிப்புக்கு கிளம்பும் திட்டத்திலிருந்தாராம் பாலா. ஆனால் அவரது சிஷ்யனும் படத்தின் ஹீரோவுமான சசிகுமார், பிரம்மன் படத்தில் பிசியாக இருப்பதால் பிப்ரவரியிலிருந்து அவர் பாலாவின் கண்ட்ரோலுக்குள் வந்துவிடுவார் என்கிறார்கள். இந்த படத்தில் பாலாவுடன் பயணிக்கும் சக டெக்னிஷியன்கள் யார் யார்? யார் புதுசாக வருகிறார்களோ தெரியாது. ஆனால் பழையவர்களில் ஜி.வி.பிரகாஷும், ஒளிப்பதிவாளர் செழியனும் கட்டாயம் இருப்பார்களாம். ஜி.வி.பிரகாஷ் நடிகராகிட்டார். அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க பாலா சார்..

No comments: