Friday, January 24, 2014

நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்தநாள் விழா

மதுரை சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 118-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜான்ஸிராணி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வியாழக்கிழமை அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்டத் தலைவரும், இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடியவரும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பாஜக சார்பில் அதன் மாநகர் மாவட்டத் தலைவர் முத்தண்ணசுவாமி, மாநில பிரசார அணி சசிராமன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் தேசியவலிமை வே.சுவாமிநாதன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற ரத்ததானமுகாமில் ஏராளமானோர் ரத்தம் வழங்கினர். அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. திமுக சார்பில் பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி தலைமையில் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாநகர் தலைவர் ஏ.தெய்வநாயகம் தலைமையில் மாலை அணிவித்தனர். விஷ்வஹிந்துபரிஷத் சார்பில் சின்மயா சோமசுந்தரம் தலைமையிலும், தேவர் தேசியப் பேரவை சார்பில் மாநிலத் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஜனதா தளம் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் மாநிலப் பொதுச்செயலர் க.ஜான்மோசஸ், தியாகி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எல்.சந்தானம் தலைமையிலான பார்வர்டு பிளாக், கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் சட்டக்கல்லூரி முன்பு நேதாஜி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், சமூக அமைப்பினர் உள்ளிட்டோரும் சிலைக்கு மாலை அணிவித்தனர். வேலம்மாள் பள்ளியில்சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா . மதுரை விரகனூர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. துவக்கப் பள்ளி பிரிவில் நடைபெற்ற இவ் விழாவில், ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மீனாட்சிசுந்தரம் பங்கேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர் ஆர்.ரோசிலா, துவக்கப் பள்ளி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.விஜயா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சிவகங்கை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தின விழா சிவகங்கையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வியாழக்கிழமை, அரண்மனைவாசல் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சிவகங்கை நகர்மன்றத் தலைவரும், சிவப்பு நட்சத்திர மக்கள் இயக்க அமைப்பாளருமான எம்.அர்ச்சுணன் தலைமையில் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பி.எம்.ராஜேந்திரன், மாவட்டபொருளாளர் கேப்டன் ஆர்.வி.சரவணன் தலைமையில் கட்சியினரும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சிவகங்கை கிளை சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி.யோகநாதன் தலைமையில் நிர்வாகிகள் சகுபர்சாதிக், அழகுபாண்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருநெல்வேலி சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி,திருநெல்வேலியில் 151 பேர் ரத்த தானம் செய்தனர். நேதாஜி உயிர்த்துளி ரத்த தானக் கழகம், திருநெல்வேலி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவை சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள வீரபாண்டியன் மஹாலில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமை பசும்பொன் தேசிய கழகத் தலைவர் என். ஜோதிமுத்துராமலிங்கம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். எஸ். பரமசிவ ஐயப்பன், சுரேஷ், பாளை எஸ். ரபீக், திருமலை முருகன் உள்ளிட்டோர் வாழ்த்தினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உள்பட 151 பேர் ரத்த தானம் செய்தனர்.

No comments: