Sunday, September 14, 2014

மதுரையில் பார்வர்டு பிளாக் பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு


மதுரை கரிமேடு, மோதிலால் தெருவை சேர்ந்தவர் பார்வர்டு பிளாக் நிர்வாகி முத்தையா பசும்பொன். இவர் மதுரை தமிழ் சங்கத்தின் துணை தலைவராகவும், செந்தமிழ் கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தியிருந்தார். நள்ளிரவு அங்கு வந்த மர்ம ஆசாமிகள் காரின் முன்பக்க கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இன்று காலை பார்த்த போது கார் தேசப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு முத்தையா பசும்பொன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செந்தமிழ் கல்லூரியை நிர்வகிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் கார் தேசப்படுத்தப்பட்டது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments: