தேசபக்தியையும், தெய்வபக்தியையும் ஒருசேர போற்றி வாழ்ந்த எம்பெருமான் ஸ்ரீ ஸ்ரீ பசும்பொன் தெய்வீகத்திருமகனாரையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களையும் மனதில் கொண்டு நம் முக்குலத்து தெய்வங்கள் மற்றும் தலைவர்களின் ஆசியோடும். தேவரின சொந்தங்களின் ஆதரவோடும் முகநூல் மூலம் சிறு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தேசபக்தி தமிழர் முழக்கம் என்ற அமைப்பு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உறுப்பினர்களை கொண்டு செயல்படுகிறது. எங்களது உழைப்பில் வரும் வருமானத்தில் சிறுபகுதியை ஒதுக்கி இன நலத்துக்காக செயல்படவுள்ளோம். மேலும் தேசபக்தி தமிழர் முழக்கம் ஆனது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு 127/2014 என்ற பதிவு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி அங்கீகரிப்பட்ட தேசபக்தி தமிழர் முழக்கத்தின் முதல் ஆலோசனைக்கூட்டம் மதுரையில் வரும் செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கவுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் தவராமல் கலந்து கொள்ளும் படியும், மேலும் தேசபக்தி தமிழர் முழக்கத்தில் புதிதாக சேரவிருப்பமுள்ள சொந்தங்களும் கலந்து கொள்ளளாம் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டம் நடக்கவுள்ள இடம் விரைவில் அறிவிக்கப்படும். இவன்:- தேசபக்தி தமிழர் முழக்கம் தலைமை அறிவழகத்தேவர் கீழத்தூவள் அவர்கள். (கிருஷ்ணராஜ் பசும்பொன், பொள்ளாச்சி)
No comments:
Post a Comment