Wednesday, September 24, 2014

கிருஷ்ணராஜ் பசும்பொன்


சொந்தங்களே முழுவதும் படியுங்கள் என் வாழ்வில் நடந்த விசயம்:-எம்பெருமானே ஸ்ரீ ஸ்ரீ பசும்பொன் தெய்வீகத்திருமகனாரே உம் திருவடிகளே சரணம் ஐயா. கடந்த வருடம் வரை பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத்தேவர் என்றால் சாதாரண தெய்வீக பக்தியுடன் தான் வணங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 6 ஆம் நாளில் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வில் இருந்து தான் ஸ்ரீ பசும்பொன்னாரை என் குல தெய்வமாகவே வணங்க ஆரம்பித்துவிட்டேன். என் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் வழக்கம் போல அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்து என் இடது கையையே இழக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும். 25 நிமிடங்கள் அந்த கனரக இயந்திரத்தில் என் கை மாட்டிக்கொண்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் என் கையை வெளியே எடுக்கமுடியவில்லை. நேரம் ஆக ஆக பயம் வரஆரம்பித்தது. நெஞ்சிலே வேல்கம்பு பாய்ந்தாலும் அஞ்சாத வம்சத்தில் பிறந்துவிட்டு பயத்தை வெளிக்காட்ட முடியவில்லை. இருந்தாலும் வலி அதிகமாக ஆரம்பித்தது எத்தனையோ ஊழியர்கள் முயற்சி செய்தும் கையை வெளியெடுக்க முடியவில்லை. இன்னும் மூன்று வாரம் தான் இருக்கு பசும்பொன் தரிசனத்திற்கு கடந்தவருடம் போலவே இந்தவருடம் ஐயா உங்கள் சன்னதியில் நான் தங்கள் திருவடிகளை இருகரம் கூப்பி வணங்க வேண்டும் என்று மனதில் வேண்டினேன். நான் வேண்டிய அடுத்த இரண்டாவது நிமிடத்தில் என் கை வெளியே வந்துவிட்டது. மிகப்பெரிய காயம் ஏட்பட்டாலும் சிறிதளவு இரத்தம் தான் வந்தது. எல்லாம் ஸ்ரீ பசும்பொன்னாரின் சித்தம் கடந்தமுறை காயத்துடன் தான் பசும்பொன் வந்தேன். விரைவில் குணமடைந்துவிட்டேன். இந்தமுறை 48 நாட்களுக்கு முன்பே அசைவ உணவை தவிர்த்துவிட்டேன் முறைப்படி மாலை அணிந்து விரதமிருந்து புண்ணிய பூமி பசும்பொன்னுக்கு குடும்பத்துடன் வந்து குல தெய்வ வழிபாடு செய்யவுள்ளேன். ஸ்ரீ பசும்பொன்னாரே எங்கள் குலதெய்வம் என் குலதெய்வத்தின் திருவடிகளே சரணம். இவன்:- கொங்குநாட்டு தேவன் கிருஷ்ணராஜ் பசும்பொன் (பொள்ளாச்சி)

No comments: