Friday, September 26, 2014

புலிகளின் போராட்டத்திற்கு அமெரிக்க பொலிஸார் அனுமதி!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்கள் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். இந்தப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக தெற்கின் திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்திற்கு அருகாமையில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக போராட்டங்களை நடாத்துவதற்கு அமெரிக்க பொலிஸார்> புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவளித்திருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மூனறு பஸ்களில் வந்த 300 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர் என தெரிவிக்கப்படுகிறது. புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நிதி திரட்டப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் அமைப்புக்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டம் முற்று முழுதாக தோல்வியைத் தழுவியுள்ளதாக சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

No comments: