Wednesday, March 2, 2011

மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு இடம்: திமுக அறிவிப்பு


சென்னை: திமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சின்னத்திலேயே இக்கட்சி இந்தத் தொகுதியில் போட்டியிடும்.


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.

அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதற்கான உடன்பாட்டு ஏற்பட்டது. இதையடுத்து திமுக சின்னத்தில் ஒரு தொகுதியில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
234 தொகுதிகளில் இதுவரை 45 தொகுதிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இன்னும் 189 தொகுதிகள் உள்ளன. இவற்றில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை கிடைக்கும் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

No comments: