Sunday, March 20, 2011

நீங்கள் சோம்பேறியா? உற்சாகமானவரா? - பலப்பī

உற்சாகம் இருந்தால்தான் வாழ்வில் உன்னதங்களை நிகழ்த்த முடியும். வெற்றிபெற முடியும். நீங்கள் உற்சாகமானவர்தான் என்பதை உங்களுக்கு நீங்களே ஒரு பரீட்சை வைத்துக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

அதற்காக இங்கே சில வினாக்கள்...

1. காலையில் எழுந்ததும் எப்படி உணர்கிறீர்கள்?

அ. உற்சாகமாக

ஆ. சோம்பலாக

இ. வெறுமையாக

2. லட்சியத்தை அடைய முடியவில்லை என்றால்....

அ. கடும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்துடன் காணப்படுவேன்.

ஆ. லட்சியத்தை மாற்றி விடுவேன்.

இ. மீண்டும் அதே லட்சியத்தை அடைய முயற்சிப்பேன்.

3. `எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் மோசமாக நடக்கிறது' என்று நினைப்பீர்களா?

அ. அவ்வப்போது நினைப்பேன்

ஆ. அடிக்கடி நினைப்பேன்

இ. எப்போதாவது நினைப்பேன்


4. மனநல மருத்துவரின் ஆலோசனை உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறீர்களா?

அ. இல்லை.

ஆ. தேவை தான்.

இ. ஏற்கனவே அவரது உதவியை நாடியிருக்கிறேன்.

5. நீங்கள் உற்சாகமற்று இருப்பதை மற்றவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

அ. ஆம், அடிக்கடி அதுபற்றி கேட்பார்கள்.

ஆ. சில சமயம் கண்டு பிடிக்கிறார்கள்.

இ. மற்றவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

6. உங்கள் உற்சாகம் குறைந்திருக்கிறதா?

அ. ஆம். குறைந்திருக்கிறது.

ஆ. அதிகமாகியிருக்கிறது.

இ. மாறுதல் ஒன்றும் தெரியவில்லை.

7. தூக்கத்தைப் பொறுத்தவரை நீங்கள் எப்படி?

அ. படுத்த உடனேயே தூக்கம் வந்துவிடும்.

ஆ. தூக்கம் சுலபத்தில் வராது. வந்தாலும் இடையிடையே விழித்திடுவேன்.

இ. படுத்து அரைமணி நேரமான பிறகுதான் தூக்கம் வருகிறது.

8. படிப்பு அல்லது வேலையில் கவனம் செலுத்த முடிகிறதா?

அ. ஓரளவு.

ஆ. முடிவதில்லை.

இ. கவனம் செலுத்தி உற்சாகமாக செயல்படுவேன்.

கேள்விகளுக்கான பதில்களை குறித்துக் கொள்ளுங்கள்.

பதில்களுக்கான மதிப்பெண்கள் கீழே தரப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பதிலுக்குமான மதிப்பெண்களை குறித்து கூட்டுத் தொகையை கண்டுபிடியுங்கள். பிறகு நீங்கள் எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்

1. அ. - 0, ஆ. - 5, இ. - 10

2. அ. - 10, ஆ. - 5, இ. - 0

3. அ. - 5, ஆ. - 10, இ. - 0

4. அ. - 0, ஆ. - 5, இ. - 10

5. அ. - 10, ஆ. - 5, இ. - 0

6. அ. - 10, ஆ. - 5, இ. - 5

7. அ. - 0, ஆ. - 10, இ. - 5

8. அ. - 5, ஆ - 10, இ. - 0

உங்கள் மதிப்பெண் 25-க்கும் குறைவு என்றால்...

நீங்கள் மிகவும் உற்சாகமானவர். உங்கள் உற்சாகம் தொடர வாழ்த்துக்கள்.

25 முதல் 55 வரை என்றால்

உங்கள் மனது அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. உற்சாகத்தை நீங்கள் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதைப்பற்றி சிந்தியுங்கள். அதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசியுங்கள்.

55-க்கு மேல் என்றால்...

நீங்கள் உற்சாகம் இழந்து காணப்படுகிறீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ளும் கட்டாயம் இருக்கிறது. மனோதத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உற்சாகமானவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்படுங்கள். மாற்றங்கள் சாத்தியமே!

No comments: