Tuesday, November 20, 2012

ADMK AGAINST MUKKULATHORS - சாயல்குடி அருகே தேவர்குல கூட்டமைப்பு நிறுவனர் சண்முகையா பாண்டியன் கைது

கடலாடி பகுதியில வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தேவரினக் கூட்டமைப்புத் தலைவர் சண்முகையா பாண்டியன் உள்பட 6 பேரைப் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.
 திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் சண்முகையா பாண்டியன்(48). இவர் தேவரினக் கூட்டமைப்பை நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். 
 பசும்பொன்னில் நடைபெற்ற பசும்பொன் தேவர் குருபூஜையின்போது, பரமக்குடி பகுதியில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்கூற சண்முகையா பாண்டியன் தனது ஆதரவாளர்கள் சிலருடன் முதுகுளத்தூர், கடலாடி பகுதி ஊர்களுக்குச் சென்றார். 
 அப்போது குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் சண்முகையா பாண்டியன் பேசினாராம். இது குறித்து பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருந்த சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் கடலாடி காவல் நிலை யத்தில் புகார் செய்தார்.
 இதையடுத்து ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராம சுப்பிரமணியம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி.க்கள் அபிநவ்குமார் (கமுதி), விக்ரமன் (முதுகுளத்தூர்), டி..எஸ்.பி.க்கள் கணேசன் (பரமக்குடி), சோமசேகரன் (கீழக்கரை) ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிச்சையா, லாமேக், ஜேசு, துரை, சுரேஷ் கல்யாண குமார் ஆகியோர் அடங்கிய தனி போலீஸ் படையினர் கடலாடி பகுதிக்கு விரைந்தனர்.
 வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக சண்முகையா பாண்டியன், இவரது ஆதரவாளர்களான செங்கோட்டை அருகே உள்ள மேலப்பாவூரைச் சேர்ந்த செல்லையா மகன் பெருமாள்(24), அழகையா மகன் சுப்பிரமணியன்(25), முப்பிடாதி மகன் சின்னத்துரை, ராமச்சந்திரன் மகன் துரை சிங்கம்(24), முத்துராமலிங்கம் மகன் பாலமுருகன்(30) ஆகிய 6 பேரைத் தனிப்படை போலீஸôர் கைது செய்தனர்.
 இவர்கள் அனைவரும் முதுகுளத்தூர் நீதிமன்ற குற்றவியல் நடுவர் மோகன்ராம் முன்னிலையில் திங்கள்கிழமை ஆஜர் செய்யப்பட்டனர்.
 சண்முகையா பாண்டியன் உள்பட 6 பேரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் மோகன்ராம் உத்தரவிட்டார்.
 பின்னர் சண்முகையா பாண்டியன், பெருமாள், சுப்பிரமணியன், சின்னத்துரை, துரைசிங்கம், பாலமுருகன் ஆகியோர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். 
 சண்முகையா பாண்டியன் கைது சம்பவத்தைத் தொடர்ந்து கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களில் பதற்றம் ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்கு, அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments: