Sunday, March 24, 2013

கோவில்பட்டியில் பரபரப்பு தேவர் சிலை உடைப்பு : கடையடைப்பு, மறியல்




கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் உள்ள தேவர் சிலையை நேற்று முன்தினம் இரவில் மர்மநபர்கள் சிலையை உடைத்துவிட்டனர். நேற்று காலை இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் பகுதியினர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யகோரி சிலை முன்புறம் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் மறியல் நடந்தது. இதன் காரணமாக அரசு பஸ்கள் டெப்போவிற்கு சென்றன. கோவில்பட்டி நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. தியேட்டர் களிலும் படம் ஓடவில்லை. பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. பள்ளி வாகனங்களும் ஓடவில்லை. கோவில்பட்டி நகர எல்லையில் ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்கள், ஒரு ஆட்டோவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன 
AGITATION:People staging a protest at Sankaralingapuram near Kovilpatti in Tuticorin district on Saturday.— Photo: N. Rajesh
நெல்லை எஸ்.பி.விஜயேந்திர பிதரி, சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுசீந்திரத்தில் இருந்து தேவர் சிலை வந்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து பைபாஸ் ரோட்டில் இருந்த மக்கள் கலைந்து சென்றனர். மதியம் 3 மணிக்கு சுசீந்திரத்தில் இருந்து தேவர்சிலை கொண்டு வரப்பட்டது. சிலைக்கு மாலைகள் அணிவித்து ஊர்வலமாக சங்கரலிங்கபுரத்திற்கு கொண்டு சென்றனர். தேவர் சிலை உடைத் தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

அனைத்து சிலைகளுக்கும் பாதுகாப்பு

கோவில்பட்டியில் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் சமுதாய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாவட்ட ஏடிஎஸ்பி மகேந்திரன் தலைமையில் மணிமுத்தாறு பட்டாலியன், மாவட்ட ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலேயே மானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 10 சிலைகள் உள்ளன. எனவே அங்கு ஆயுதப்படை போலீசார் 200 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: