Tuesday, March 19, 2013

ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க சீமான் ஜெனீவா போய்ச்சேர்ந்தார்: சுவிஸ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். சினிமா வாய்ப்புகளை உதறிவிட்டு தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்காக போராடி வருகிறார்.


தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரி பேசுவதற்காக சீமான் சுவிஸ் சென்றார். அவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் தடா சந்திரசேகரும் சென்றுள்ளார்.





அங்கிருந்து சீமான் இன்று பிற்பகல் ஜெனீவா போய்ச்சேர்ந்தார். ஜெனீவா விமான நிலையத்தில் அவரை அங்கு திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான சுவிஸ் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் மலர்ச் செண்டு தமிழ் ஈழ தேசியகொடி வழங்கி வரவேற்றார்கள்.



அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கோரி தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் சீமான் சுவிஸ் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.





22-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஜெனீவா நகரில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சியிலும் சீமான் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.







No comments: