Thursday, March 28, 2013

ராமேஸ்வரத்தில் மறவர் , அகமுடையர் சமரசமாகியும் விடாது விரட்டும் காவல்துறை – அல்லாடி அலைமோதும் தேவரின இளைஞர்கள்

ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியில் ஏற்பட்ட பிரச்சினையை சில அரசியல்வாதி மற்றும் உள்ளூர் ரவுடிகள் பயன்படுத்திக் கொண்டு கலவரம் அளவிற்கு கொண்டுபோய் முடித்தனர். அதுபோதாதென்று தமிழக பத்திரிக்கைகளின் தாண்டவம் வேறு. தேவர் ஜெயந்தியின்போது பெட்ரோல் குண்டு வீச்சில் கருகி வெந்து இறந்த செய்தியை வெளியிடத் துப்பிலாதவர்கள் தேவர் இனத்தவருக்குள் பிரச்சனை என்றவுடன் ஒரு பக்கத்துக்கு செய்தியை போட்டு துண்டாட நினைத்தார்கள். ஆனால் வெட்டி விளம்பரமா போய்விட்டது. நமக்குள் பிரிவு கூடாதென்ற உணர்வுதான் முக்குலத்தோரிடையே மேலோங்கியது . பத்திரிகைகள் பிரச்சனையை குடையாமல் அந்த இடத்தில் ஆஸ்துமா, மூலம் விளம்பரம் போட்டிருந்தாலும் காசு பார்த்திருக்கலாம் வழக்கம்போல.




ராமேஸ்வரம் பிரச்னையை அடுத்து அங்கே இரு தரப்பினரும் சமரசம் பேச முயன்றதை காவல்துறை தடுத்து இரு தரப்பினர்மீதும் வழக்கு பதிவு செய்து சம்பந்தமே இல்லாத பொதுமக்களை கைது செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரச்னைக்கு காரணமானவர்கள் யாரென தெரிந்தும் அவர்களை விட்டுவிட்டு பொதுமக்களை , இளைஞர்களை போலிஸ் தொந்தரவு பண்ணுவதாக தேவரின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்     DEVARTV.COM

No comments: