Friday, April 1, 2011

அதிமுகவினர் காரில் கடத்தியதாக நடிகர் கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் புகார்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிலர் ஏற்கனவே வாபஸ் பெற்றுவிட்டனர். இந்நிலையில் போட்டியிடாத தொகுதியில் திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக கட்சி தலைவர் கார்த்திக் தெரிவித்திருந்தார். கம்பம் தொகுதியில் ரவிச்சந்திரன், போடி தொகுதியில் அறிவரசன், உசிலம்பட்டி தொகுதியில் வீரண்ணா ராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் அறிவரசன் வேட்பு மனுவை வாபஸ் பெற்று விட்டார். ரவிச்சந்திரன், வீரண்ணா ராஜூ ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். ரவிச்சந்திரனும், வீரண்ணா ராஜூவும் அண்ணா சாலையில் நடந்து சென்றனர். அப்போது, அறிவரசன் அடியாட்களுடன் வந்து ரவிச்சந்திரன், வீரண்ணா ராஜூவை காரில் கடத்தினர். அதன்பின், இருவரையும் திருச்சி திண்டுக்கல் இடையே இறக்கி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து 2 பேரும் அண்ணாசாலை போலீசில் புகார் அளித்தனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து அவர்கள் கூறியதாவது: ‘‘அறிவரசன் அதிமுகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மனுவை வாபஸ் பெற்றுவிட்டார். உசிலம்பட்டி மற்றும் கம்பம் தொகுதியில் நாங்கள் போட்டியிடுகிறோம். இதனால், அதிமுக மற்றும் தேமுதிக வெற்றி பாதிக்கப்படும் என்று கருதி, அறிவரசன் மற்றும் 2 அதிமுகவினர் எங்களை காரில் கடத்தினர். மனுக்களை வாபஸ் பெறும்படி துப்பாகி முனையில் மிரட்டினர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்’’ என்றனர்.

No comments: