Sunday, April 24, 2011

வில்லனாகவும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்!

காமெடி நடிகனாக ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்ட என்னை கண்டிப்பாக தமிழக ரசிகர்கள் வில்லன் வேடத்திலும் ஏற்றுக்கொள்வார்கள் என்கிறார் விவேக்.

காரணம் ஏற்கனவே காமெடியன்களாக நடித்த தேங்காய்சீனிவாசன், கவுண்டமணி உள்பட பல நடிகர்கள் வில்லன் வேடங்களிலும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில்கூட புலிவேசம் என்ற படத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வில்லனாக நடித்துள்ளார். அவதைத்தொடர்ந்து நானும் புதுமுக நடிகர் ஒருவர் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறேன். எனக்கு பொருத்தமான வேடம்தான் அது. அதனால் வில்லன் வேடத்திலும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்கிறார் விவேக்.

அவரிடத்தில் இனி தொடர்ந்து வில்லனாக நடிப்பீர்களோ? என்று கேட்டால்,

ஆசைக்காக சில படங்களில் நடிப்பேன். விவேக் என்றுமே காமெடி நடிகன்தான் என்று பதில் தருகிறார் அவர்.

No comments: