Tuesday, April 12, 2011

வேட்பாளர்கள் பற்றிய விவரங்களை தரும் இணையதளம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. "இந்தியா வோட்ஸ்' தன்னார்வ அமைப்பின் சார்பில், www.indiavotes.org.in என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இதில், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர், வயது, கல்வித் தகுதி, குற்றப் பின்னணி, சொத்து விவரம் உள்ளிட்ட விவரங்கள் தொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள வாக்காளர்களுக்கு இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும். "இந்தியா வோட்ஸ்' அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: