Sunday, April 3, 2011

அழகிரிக்கு முன் ஜாமீன்

மதுரை; தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

மதுரை மேலூர் அருகே கோவில் ஒன்றில் கிராமத்தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அழகிரியை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வீடியோ எடுத்தனர்.

ரகசிய சந்திப்பை வீடியோ எடுத்த வீடியோ கிராபர், தாசில்தார் ஆகியோர் அழகிரி முன்னிலையில் தாக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. எனவே அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. எனவே அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது. அவருடன் வழக்கு பதிவு செய்யப்பட்ட மேலும் இரண்டு
முன்ஜாமீன் பெற்றநிலையில் மு.க. அழகிரி தனது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் இன்று தாக்கல் செய்தார். அவரது முன்ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு ஜாமீன வழங்கி உத்தரவிட்டனர்.

தன்மீது மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் வேண்டும் என்றே குற்றம் சுமத்துவதாக அழகிரி சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: