Sunday, October 26, 2014

நந்தனத்தில் 30–ந்தேதி முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மதுசூதனன் மாலை அணிவிக்கிறார்


அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:– தேவர் திருமகனாரின் 107ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 30–ந்தேதி காலை 10 மணி அளவில், சென்னை, நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: