முதுகுளத்தூர், அக்.30-
முதுகுளத்தூரில் தேவர் ஜெயந்திவிழா, குரு பூஜை விழாவையொட்டி தேவர் சிலைக்கு 2008 பால்குட அபிஷேகம் நடந்தது.
யாகசாலை பூஜை
முதுகுளத்தூர் பஸ்நிலை யத்தில் அமைந் துள்ள தேவர் சிலைக்கு ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் கீழத் தூவல் ராமசாமி தலைமையில் யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து முதுகுளத்தூர் தேவர் இளைஞர்கள் சார்பில் 2008 பால்குடத்தை சுப்பிர மணியசுவாமி கோவிலில் இருந்து யானை முன்செல்ல பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் யானை மாலையை எடுத்துக் கொடுக்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பாலா பிஷேம் நடந்தது. முதுகுளத்தூர் போலீஸ் துணைசூப்பிரண்டு நடராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆதிபராசக்தி பக்தர்கள்,இளைஞர்கள் 5,000-ம் பேருக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது. விழாவில் ராமச் சந்திரன், ராமசாமி, கோவிந்த ராமு, பாலன், மேகராஜ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment