Monday, October 20, 2014

தேசபக்தி தமிழர் முழக்கம் தலைமை அறிவழகத்தேவர்


சொந்தங்கள் அனைவருக்கும் அடியேனின் வணக்கம்:- இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது தேவரின தெய்வங்களின் திருவிழாவிற்கு தாய் மண்ணாம் தமிழ் மண்ணை காக்கவே பிறந்து நாட்டிற்காகவே வாழ்ந்து, பிறந்த நாட்டைக் காக்க வாள்,வளரி, வேலோடு என்னற்ற போர்க்களங்களை கண்டு வெற்றி அல்லது மார்தட்டி வீர மரணத்தை பரிசாக ஏற்ற ஒரே இனம் நம் தேவரினம் தான். கடந்த கால வரலாற்றை புரட்டி பார்த்தால் அங்கே புதைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கல்வெட்டுக்கு பின்பும் தேவரினத்தின் சரித்திரம் விதைக்கப்பட்டிருக்கும். இராஜ இராஜ சோழத்தேவர், பூழி மாமறவர், ராணி வீரமங்கை வேலுநாச்சியார், ஸ்ரீ மருது பாண்டிய தெய்வங்கள், பகதூர் வெள்ளைய தேவன், கருப்பு சேர்வை, ஸ்ரீ பசும்பொன் தெய்வீகத்திருமகனார் என நம் முன்னோர்களின் புகழ் வானளவு உயர்ந்துள்ளது. நம்மினத்திற்கு விழா எடுக்க வேண்டுமென்றால் 365 நாள் போதாது. இந்த மாதம் அதில் முக்கியமானது. புலிக்கொடியின் மகத்துவத்தை உலகரியச்செய்த இராஜ இராஜ சோழத்தேவரின் சதயவிழா வருகிறது. நாட்டு மக்களின் நலனுக்காகவே பிறந்து, சாதி, மதம், பாராமல் என்னற்ற ஆலயங்கள் பல கட்டி, வாளையும், வலரியையும் ஏந்தி நாட்டுக்காக வீரப்போர் பல புரிந்து, மங்கா சரித்திரம் படைத்து தேவரினத்தின் புகழை உலகரியச்செய்த ஸ்ரீ மருது பாண்டிய தெய்வங்களின் ஜெயந்திவிழா வருகிறது. மண்ணாசை, பெண்ணாசை, பொண்ணாசை துறந்து உலகத் தலைவர்களெல்லாம் போற்றிய உத்தமத் தலைவர், தேசத்தலைவர்கள் எல்லாம் போற்றிய தேசியத் தலைவர் வாழ் நாளில் பெரும் பகுதியை நாட்டுக்காக சிறையில் களித்து. ஜமீன்தாராக பிறந்து ஏழை எளிய மக்களுக்கு சொத்துக்களையெல்லாம் வாரி வழங்கிய தேவரினத்தின் தெய்வமாக வணங்கப்படும் ஸ்ரீலஸ்ரீ பசும்பொன் தெய்வீகத்திருமனாரின் குருபூஜை மற்றும் ஜெயந்திவிழா வருகிறது. நம்மினத்தின் திருவிழாக்கள் சிறப்பாக அமைய நம்மின இளைஞர்கள் வைக்கும் பேனர்கள், அடிக்கும் போஸ்டர்களின் அதிகப்படியாக வசனங்களை தவிர்த்து நம்மினத்தின் தெய்வங்களின் பட்டங்கள், சிறப்பு பெயர்கள், அவர்கள் நாட்டிற்காக செய்த தியாகங்களை பதிவிடுங்கள் பாமர மக்களுக்கு நம்மின பெருமைகளை தெரியப்படுத்துவோம். மேலும் மது அருந்தி, புகைப்பிடித்து காளையார் கோவில், பசும்பொன் போன்ற புண்ணிய தலங்களுக்கு வருவோரை தடுத்து நம் தெய்வங்களின் மகத்துவத்தை எடுத்து சொல்லுங்கள். கட்டளையிட்டால் கேட்க மாட்டார்கள் நம்மினத்தவர்கள் அன்பாக எடுத்து சொல்லுங்கள் வாழ்நாள் முழுவதுவம் அந்த தவறை செய்ய மாட்டார்கள்.மேலும் தேவரின தெய்வங்களான ஸ்ரீ மருது பாண்டியர்கள், ஸ்ரீ பசும்பொன் தெய்வீகத்திருமகனார் ஆகியோரின் இயற்கையான புகைப்படங்களையே பயன்படுத்துவோம். நம்மின திருவிழாவை உலகரியச் செய்வோம். பசும்பொன்னே கோவில்! ஸ்ரீ பசும்பொன்னாரே தெய்வம் இவன்:- தேசபக்தி தமிழர் முழக்கம் தலைமை அறிவழகத்தேவர் (கிருஷ்ணராஜ் பசும்பொன், பொள்ளாச்சி)

No comments: