Tuesday, October 28, 2014

மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா


காளையார்கோவில்,

அக்.28-

காளையார்கோவிலில் நேற்று மருதுபாண்டியர் கள் குருபூஜை விழா நடைபெற்றது. அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பெண் கள் பால் குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

குருபூஜை விழா

மருதுபாண்டியர்களின் 213-வது குருபூஜை விழா காளையார்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 8 மணி அளவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டது. இதைத்தொடர்ந்து காளையார்கோவில் பகுதியை சேர்ந்த பெண்கள் 213 பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் பாலாபிஷே கம் செய்தனர்.

இதன் பின் அ.தி.மு.க.சார் பில் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலா ளர் ஆணிமுத்து தலைமையி லும், காளையார்கோவில் ஒன் றிய செயலாளர் பழனிச்சாமி முன்னிலையிலும் புரட்சி பூமி நாதன், வக்கீல் பிரிவு மாவட்ட துணைச்செயலாளர் நவநீதன், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பனைவெல்ல கூட்டு றவு சம்மேளன துணைத் தலை வர் முத்துக்குமரன், கூட்டுறவு சங்க தலைவர் மனோகரன், நில வளவங்கி துணைத்தலைவர் வீரப்பன் மற்றும் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க.

தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் பொன் முத்து ராம லிங்கம் தலைமையில் முன் னாள் எம்.பி. பவானி ராஜேந் திரன் மற்றும் கட்சி பிரமுகர் கள் அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.மு.க. சார்பில் ஒன்றி யச் செயலாளர் ஏ.எஸ். ஆரோக்கியம் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத் தினர். காங்கிரஸ் கட்சி சார் பில் முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசு தலைமையில் மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, துரை கருணாநிதி, வட்டார தலைவர் சந்தியாகு, மாவட்ட பொதுச்செயலாளர் சார்லஸ் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

பாரதீய ஜனதா கட்சி சார் பில் மாவட்ட செயலாளர் பி.எம்.ராஜேந்திரன் தலைமை யில் மாநில வர்த்தக அணி சகாதேவன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்தனர். மூவேந்தர் முன்னணிக்கழகம் சார்பில் நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமை யில் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.தேவர், முத்துச்சாமி, மாவட்ட தலைவர் பழனிக் குமார், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் கட்சியி னர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக இவர்கள் திருப்பத்தூரில் உள்ள நினை விடத்திலும் அஞ்சலி செலுத் தினர்.

நடிகர் கருணாஸ்

தேசிய பார்வார்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் அரச குமார், அகில இந்திய முக் குலத்தோர் நிறுவனத்தலைவர் சிற்றரசு தலைமையில் கட்சி யினரும், நடிகர் கருணாஸ் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்பு பணியில் கோவை 4-வது பட்டாலியன் போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, சென்னை ஆவடி 2-வது பட் டாலியன் போலீஸ் சூப்பி ரண்டு ஈஸ்வரன், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், தமிழ்ச்செல்வம், துணை போலீஸ் சூப்பிரண் டுகள் அன்பு, திருநாவுக்கரசு, காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்முகமது நசீர் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள் பட 2 ஆயிரத்து 600 போலீசார் ஈடுபட்டு இருந்தனர். மேலும் மாவட்டத்தின் முக்கிய இடங் களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. நினைவு இடத்தை சுற்றி கண் காணிப்பு கேமராவும் பொருத் தப்பட்டு இருந்தது.

அஞ்சலி செலுத்துபவர்கள் வரிசையாக செல்ல தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் முருகன், லோகேஸ்வரி, ஊராட்சிமன்ற தலைவர் கேப் டன் அருள்ராஜ் மற்றும் ஒன் றிய அலுவலர்கள் குருபூஜை விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விழாவையொட்டி டாக்டர் சேதுராமன் ஏற்பாட்டிலும், மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார் ஏற்பாட்டிலும் அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட் டது.

மருதுபாண்டியர் குரு பூஜை விழாவில் திரு வா டானை தாலுகாவை சேர்ந்த ஏராளமானோர் னோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மருதுபாண்டியர்

சுதந்திர போராட்ட வீரர்களும், சிவகங்கை மன்னர்களுமான மாமன்னர் மருதுபாண்டியர்களின் 213-வது குருபூஜை விழா நேற்று காளையார்கோவிலில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திரு வாடானை தாலுகாவை சேர்ந்த ஆயிரக்கணக்கா னோர் நேற்று காளையார் கோவிலுக்கு சென்றனர். தொண்டி, திருவாடானை வட்டார அகமுடையார் சங் கம் சார்பில் ஏராளமான வாக னங்களில் சென்று காளை யார் கோவிலில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரி யாதை செலுத்தினர். இதனை யொட்டி தொண்டியில் இருந்து காளையார்கோவில் வரை மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து கிராமங்களி லும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டி ருந்தனர். அனைத்து வாகனங் களும் சி.கே.மங்கலம் சோத னை சாவடியில் பலத்த பரிசோதனைக்கு பிறகு அனு மதிக்கப்பட்டது.

திருவாடானை தாலுகா வில் 100க்கும் மேற்பட்ட கிரா மங்களில் மருது பாண்டியர் குருபூஜை விழாவை யொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. அதனை தொடர்ந்து கார், வேன் உள் ளிட்ட வாகனங்களில் பல ஆயி ரக்கணக்கானோர் காளை யார் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். விழாவை யொட்டி மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் காளையார்கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட் டன.

வரவேற்பு

இதேபோல ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட புதிய பார்வை வாசகர் வட்டம், பூலித்தேவன் பாசறை ஆகி யவை சார்பில் குருபூஜை விழாவில் கலந்து கொண்ட ஏராளமானோர் புதிய பார்வை வாசகர் வட்ட மாவட்ட தலைவர் பொன் னுச்சாமி தலைமையில் விழா வுக்கு வந்திருந்த நடராஜ னுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

No comments: