Monday, October 27, 2014

வீரமன்னர்களுக்கு முக்குலத்தோர் வீரவணக்கம்


சிவகங்கை சீமையின் சிங்கங்கள் பரங்கியரை பதற வைத்து சிதறடித்த புலிகள். சின்னமருது ஆளுமையில் சிறப்பாக விளங்கினார். பெரிய மருது ஆயுதமில்லாமல் ஆறு அடி வேங்கையை கைகளாலே வேட்டையாடும் அசாத்திய திறமை கொண்டவர். மருதுபாண்டியர்கள் ஆலயப்பணிகளை சிறப்பாக செய்தனர். இறைபக்தி அதிகம் உள்ளவர்கள். நட்புக்காக அடைக்கலம் கேட்டு வந்தவரை ஆதரித்தனர். அதன் விளைவே வெள்ளையர்கள் படையெடுக்க காரணம். ஆனால் மருதுபாண்டியர்கள் எதற்கும் அஞ்சாத சிங்கங்கள் அல்லவா வெள்ளயரை ஓட ஓட விரட்டியடித்தனர். சிவகங்கை சீமை சிங்கங்களின் கோட்டையென வெள்ளையர் பயந்து நடுங்கினர். நேருக்குநேர் போரிட்டு வெற்றிபெற முடியாது என நினைத்த வெள்ளையர்கள் சரணைடையவில்லை என்றால் காளையார்கோவில் கோவிலை இடித்துவிடுவோம் என்று நய வஞ்சமாக கைது செய்தனர். நேருக்குநேர் போரிட்டிருந்தால் வெள்ளையனை சிதற வைத்திருப்பார்கள். இப்படிப்படட்ட நம் வீரமன்னர்களுக்கு முக்குலத்தோர் அனைவரும் வீரவணக்கம் செய்து அவர்கள் வரலாறுகளை பாதுகாத்து அதன் படி ஒற்றுமையாக இன முன்னேற்றத்திற்காகவும் தேச நலனுக்காகவும் பாடுபடவேண்டும். வீரமருதிருவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்கள். வீரத்தோடும் விவேகத்தோடும இருப்போம். வீரவணக்கம்! வீரவணக்கம்!! என்றும் சமுதாய பணியில் பூபாலனின் நவரசம் முக்குலத்தோர் சமுதாய மாத இதழ்

No comments: