Wednesday, October 15, 2014

அனேகன் டீசர் தீபாவளிக்கு வெளியீடு


தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் என்ற புதுமுகம் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. நீண்டகால தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை வரும் தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும், தீபாவளிக்கு பிறகு ஆடியோ வெளியீட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும், சங்கர் மகாதேவன், பவதாரணி உள்ளிட்ட முன்னணி பாடகர்களும் இப்படத்தில் பாடியுள்ளனர். ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

No comments: