Thursday, October 30, 2014

நந்தனம் தேவர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை


தேவர் திருமகனாரின் 107–வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை நந்தனம் தேவர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், பொன்னையன், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, மோகன், வளர்மதி, செந்தில்பாலாஜி, கோகுலஇந்திரா, ராஜேந்திர பாலாஜி, பழனியப்பன், சின்னையா, எம்.சி.சம்பத், முக்கூர் சுப்பிரமணியன், தோப்பு வெங்கடாசலம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மேயர் சைதை துரைசாமி, ஜெயவர்தன் எம்.பி., கலைராஜன் எம்.எல்.ஏ., வாலாஜாபாத் கணேசன், சின்னையன், சேலம் ரவிச்சந்திரன், முகப்பேர் இளஞ்செழியன், தொழிற்சங்க செயலாளர் அர்ஜுனன், வடபழனி கந்தசாமி உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், வி.பி.துரைசாமி, கே.கே.நகர் தனசேகரன், முத்துவேல், பூச்சி முருகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். மேலும் மாலை அணிவித்தவர்கள் விவரம்:– தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார், கோவைத்தங்கம், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், சைதை ரவி, வேலுத்தேவர், ஜி.ஆர். வெங்கடேஷ், சீனிவாசன், எம்.ஆர்.ஏழுமலை, ஜெ.ராகவன், சரவணன். பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்டத் தலைவர்கள் பிரகாஷ், காளிதாஸ், ஜெய்சங்கர், ஜி.கே.எஸ்.வேளச்சேரி தொகுதி தலைவர் சி.திருப்புகழ். நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், துரை, மேகநாதன், புல்லட் வேதா, வைத்தியநாதன், சுரேஷ், முரளி. சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர், ராஜா, பொன்னரசன், கே.கே.நாதன், அஸ்சாம் பாக்கியம், முருகேசபாண்டியன், ரஞ்சன், அட்ராஜா, மணி, கோபி, அமின் உள்பட பலர் மாலை அணிவித்தனர். மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் பசும்பொன் நினைவிடத்தில் நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் எஸ்.ஆர்.தேவர், துணைத் தலைவர்கள் கமுவன், செந்தில் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 1 லட்சம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நந்தனம் தேவர் சிலைக்கு துணை பொதுச்செயலாளர் இரா.பிரபு தலைமையில் சேப்பாக்கம் இளைஞரணி செயலாளர் சுரேஷ், மகேந்திரன், முருகேசன், கார்த்திக், சிவக்குமார், சேது, புவனா, தென்சென்னை மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, நாதன், சங்கரபாண்டியன், முருகபாண்டியன் பங்கேற்று அன்னதானமும் வழங்கினர். மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநில இணை பொதுச்செயலாளர் எம்.ஆர்.லிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் ராஜாஸ், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் குடந்தை ரமேஷ், ராஜேந்திரன், காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், வேலம்மாள், காளிதாஸ், செந்தில்நாதன், வேல்பாண்டியன், கணேசன், சுப்புராமன், வி.கே.இளங்கோ, வேங்கை வீரர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முக்குலத்தேவர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவன தலைவர் எம்.பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள் கோட்டைசாமி, எஸ்.ஜான்பால், அருள்மாணிக்கவாசகம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் முக்குலத்தேவர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் 3–வது ஆண்டாக நடக்கும் அன்னதான நிகழ்ச்சியை பிரவீன் குமார் தொடங்கி வைத்தார்.

No comments: