Wednesday, October 29, 2014

தேவர் ஜெயந்தி விழா: முளைப்பாரி, பால்குடம் ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு


தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முளைப்பாரி, பால்குடம் ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை நகர் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:– மதுரை மாநகரில் தேவர் ஜெயந்தியையொட்டி 3 ஆயிரம் போலீசார் மற்றும் 6 கம்பெனி சிறப்பு காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முளைப்பாரி, பால்குட ஊர்வலங்கள் அதிகாலை புறப்பட்டு காலை 8 மணிக்குள் போலீசார் அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே சென்று முடித்து விட வேண்டும். போலீஸ் நிலையங்களில் அனுமதி பெற்ற வாகன அனுமதி சீட்டு ஒட்டிய வாகனங்கள் மட்டுமே மதுரையில் இருந்து பசும்பொன் செல்ல அனுமதிக்கப்படும். மோட்டார் சைக்கிள் ஊர்வலமாக செல்ல அனுமதி கிடையாது. தேனியில் இருந்து வரும் வாகனங்கள் முடக்குச் சாலை, தேனி மெயின் ரோடு, காளவாசல், அரசரடி, புது ஜெயில் ரோடு, சிம்மக்கல், யானைக்கல், மேளக்காரத் தெரு, கோரிப்பாளையம், ஆவின் ஜங்ஷன், குருவிக்காரன் சாலை, தெப்பக்குளம் வழியாக ராமநாதபுரம் சாலையில் செல்ல வேண்டும். திண்டுக்கல் வாகனங்கள் பாத்திமா கல்லூரி, கொன்னவாயன் சாலை, பாலம் ஸ்டேசன் ரோடு, கோரிப்பாளையம், பனகல் சாலை, குருவிக்காரன் சாலை, தெப்பக்குளம் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். திருநெல்வேலி, விருதுநகர், மதுரை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பழங்காநத்தம், டி.பி.கே. ரோடு, பெரியார் பஸ் நிலையம் மேற்கு, வடக்கு வெளி வீதிகள், யானைக்கல் கல்பாலம், கோரிப்பாளையம், தேவர் சிலை வந்து பின்னர் குருவிக்காரன் சாலை, தெப்பக்குளம் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: