Thursday, October 30, 2014

பசும்பொன்னில் தேவரின் அரசியல் விழா


பசும்பொன்னில் தேவரின் அரசியல்விழா நேற்று நடந்தது.

ஜெயந்தி விழா

கமுதி அருகே பசும் பொன் னில் முத்து ராம லிங்க தேவர் ஜெயந்தி,குருபூஜை விழாவில் 2-வது நாளான நேற்று தேவரின் அரசியல் விழா கொண் டாடப்பட்டது. காலை 8 மணிக்கு நினை வாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலை மையில் கோவை காமாட்சிபுரி ஆதி னம் சிவலிங்ககேசுவர சாமிகள் குழுவினரின் யாக சாலை பூஜை நடந்தது.

தொடர்ந்து தேவரின் அரசியல் வாழ்க்கை பற்றி சொற்பொழிவு நடந்தது. பின் னர் முதுகுளத்தூர், முஸ்டக் குறிச்சி தேவர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் காசி நாதன், செல்வபாண்டியன் முன்னி லையில் ஜோதி ஏந்தி,பால்குடம் எடுத்துவந்தனர்.

காணிக்கை

இடைச்சியூரணி, வடுக பட்டி, மூலைக்கரை பட்டி, மண்டல மாணிக்கம், மறக் குளம், கமுதி, கண்ணார் பட் டியை சேர்ந்த பெண்கள் பால் குடம், முளைப் பாரி எடுத்து வந்து அஞ்சலி செலுத் தினர். அகில இந்திய முக்குலத் தோர் பாசறை தலைவர் சிற்றரசு தேவர், மாநில பொறுப் பாளர்கள் இந்திர குமார், காடு வெட்டியார் ஆகியோரும் கமுதி பேரூராட்சி தலைவர் ரமேஷ் பாபு, ராமச்சந்திர பூபதி,கூட்டுறவு சங்க தலைவர் காசிநாதன் உள்பட ஏராள மானோர் தேவர் நினைவி டத்தில் அஞ்சலி செலுத்தினர். கடலாடி சாயல் குடி, முது குளத்தூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். மூவேந் தர் பண் பாட்டு கழகம் சார்பில் பொங்கல் வைத்து காணிக்கை செலுத்தப்பட்டது.

No comments: