ராமேசுவரம் கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் சேதுபதி மன்னர்களின் சிலைகள்.
திருப்பணி வேலைகள் :ராமேசுவரம் கோவிலில் அடுத்த வருடம் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை யொட்டி கோவிலில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகப் பிரசித்தி பெற்ற 3-ஆம் பிரகாரத்தில் ரூ.50 லட்சம் செலவில் திருப்பணிகளும் சுவாமி-அம்மன் சன்னதி பிரகாரங்களில் உள்ள கருங்கற்களினால் ஆன பழமையான தூண்களிலும், திருப் பணிகள் முடிவடைந்துள்ன.இதேபோல கோவிலின் சுவாமி சன்னதியில் உள்ள அனுப்பு மண்டபத்தில் உள்ள பிரகாரத்தின் தூண்களும், அதில் உள்ள பழமையான சிலைகளும் திருப் பணிகள் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளித்து வருகின்றன. இந்நிலையில் ராமேசுவரம் கோவிலின் அம்மன் சன்னதி நுழைவு வாசல் பகுதியில் உள்ள திருக்கல்யாணம் மண்டபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் தொடங்கி கடந்த 1 மாதத்திற்கு மேலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதுப்பொழிவு பெற்ற சிலைகள்
மண்டபத்தின் தூண்களில் சேதமான இடங்கள் கலவைகள் பூசப்பட்டும் வர்ணம் பூசும் பணிகளும் நடந்து வருகின்றன. இதில் ராமேசுவரம் கோவிலை கட்டுவதில் பெரும் பங்கு வகித்த ராமநாதபுரத்தை ஆண்ட பல்வேறு சேதுபதி மன்னர்களின் சிலைகளும் திருக்கல்யாண மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களிலும் உள்ளன. தூண்கள் மற்றும் சேதுபதி மன்னர்களின் சிலைகளிலும் புதிதாக ரசாயனம் கலந்த வர்ணம் பூசப்பட்டு அவை புதுப் பொலிவுடன் காட்சியளித்து வருகிறது.
No comments:
Post a Comment