சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலாக 'வள்ளி' படத்தில்தான் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் இந்த ஹேர் ஸ்டைலை அஜீத், 'மங்காத்தா, ஆரம்பம் மற்றும் வீரம் ஆகிய படங்களில் பயன்படுத்தினார். தற்போது நடித்து வரும் கவுதம் மேனன் திரைப்படத்திலும் இந்த சால்ட் அண்ட் பெப்பர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஜினி, அஜீத் ஆகியோர்களை அடுத்து சால்ட் அண்ட் பெப்பர் வேடத்தில் நடிக்க விவேக் முன்வந்துள்ளார். அடுத்ததாக விவேக் நடிக்கவுள்ள ஒரு திரைப்படத்தில் அவர் இந்த ஹேர்ஸ்டைலில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேடத்திற்காக நிஜமாகவே அவர் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.
கோலிவுட் திரையுலகில் மிகச்சில நடிகர்களே இமேஜ் குறித்து கவலைப்படாமல் தைரியமாக நரைத்த முடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் வேடத்தை ஏற்க முன்வருவதுண்டு. இந்த வரிசையில் ரஜினி, அஜீத்தை அடுத்து விவேக் இமேஜ் குறித்து கவலையில்லாமல் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தோன்றுகிறார். நகைச்சுவை நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சின்னக்கலைவாணர் என்ற சிறப்பு பெற்ற விவேக்கை புதிய தோற்றத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
No comments:
Post a Comment