Tuesday, October 28, 2014

முத்துராமலிங்க தேவர் குருபூஜை: சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்கள் கண்காணிப்பு


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நாளை (28–ந்தேதி) தொடங்கி வருகிற 30–ந்தேதி வரை நடைறெ உள்ளது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. சார்பில் அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசத்தை அணிவித்தார். அதன் பின் வங்கியில் வைக்கப்பட்டிருந்த தங்க கவசத்தை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வங்கியில் இருந்து பெற்று விழா கமிட்டியிடம் வழங்கினார். பசும்பொன் கொண்டு வரப்பட்ட தங்க கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. தேவர் ஜெயந்தி விழா ஏற்பாடுகளை அமைச்சர் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேவர் ஜெயந்தி 3 நாட்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 40–க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய 30 துப்பறியும் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 144 தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: