கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 107-வது ஜெயந்தி மற்றும் 52-வது குருபூஜை விழா இன்று(28-ந்தேதி)தொடங்குகிறது.3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாள் ஆன்மிக விழாவும், 2-ம் நாள்(29-ந்தேதி) அரசியல் விழாவும், 3-ம் நாள்(30-ந்தேதி) அரசுவிழாவும் நடைபெறும். இந்த விழாக்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தை சேர்ந்த தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள். முதல்நாளான இன்று காலை 6 மணிக்கு தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் முன்னிலையில் மங்கள இசையுடன் யாகசாலை பூஜையுடன்ஆன்மிக விழா தொடங்குகிறது. கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேசுவர சுவாமிகள், மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் யாகசாலை பூஜைகளை நடத்துகிறார்கள். தொடர்ந்து தேவரின் புராண பாடல்கள் பாடப்பட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.
No comments:
Post a Comment