தேவர் ஜெயந்தியையொட்டி முதுகுளத்தூரில் துப்பறியும் நாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.
வருகிற 30–ந்தேதி கமுதி பசும்பொன்னில் தேவர் குரு பூஜை நடக்க இருப்பதால் பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று முதுகுளத்தூர் பஜார், தெருக்கள், ஆளில்லா கட்டிடங்களில் முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன், ராமநாதபுரம் ஆயுதப்பிரிவு டி.எஸ்.பி. தண்டீஸ்வரன் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் மூக்கன் முன்னிலையிலும் துப்பறியும் நாய்கள் மூலம் சோதனை நடந்தது.
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த 20 துப்பறியும் நாய்களோடு சிறப்பு பயிற்சி பெற்ற போலீசாரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
திடீரென நாய்கள் பஜார், தெருக்களில் சோதனை செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment