Friday, October 28, 2011

பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவரின் குருபூஜை விழா தொடங்கியது: புகைப்பட கண்காட்சியை கலெக்டர் அருண்ராய் தொடங்கி வைத்தார்

பசும்பொன்னில் முத்து ராமலிங்கதேவரின் குரு பூஜை விழா இன்று காலை தொடங்கியது. பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரின் 104-வது ஜெயந்தி விழாவும், 49-வது குருபூஜை விழாவும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இன்று தொடங்கியது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன், பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் குருபூஜை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேசுவரர் சுவாமிகள் தலைமையில் குழுவினர் யாகசாலை பூஜைகள் நடத்தினர். முதல் நாளான இன்று (வெள்ளிக் கிழமை) ஆன்மீக விழாவும், நாளை (29-ந்தேதி) தேவரின் அரசியல் விழாவாகவும், 30-ந்தேதி குருபூஜை விழா வாகவும் கொண்டாடப்படு கிறது. இன்று காலை 8 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்படும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அருண் ராய் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து தேவரின பக்தர்கள் பொங்கல் வைத்து, முடிகாணிக்கை செலுத்தியும் தொடர்ஜோதி ஏந்தி வந்தும் காணிக்கை செலுத்துவார்கள். 30-ந் தேதி நடைபெறும் குரு பூஜை விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விழாவில் தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொள்கிறார்கள்.

விழாவையட்டி பல மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் வருகிற 30-ந்தேதி மரியாதை செலுத்த கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

காலை 4 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பு பூஜை. 4 1/2 மணி முதல் 5 மணி வரை அகில இந்திய பார்வர்டு பிளாக் (இல.சந்தானம்), 5 மணி முதல் 5 1/4 வரை ஜனநாயக பார்வர்டு பிளாக், 5 1/4 முதல் 5 1/2 வரை இந்திய ஜனநாயக கட்சி, 5 1/2 முதல் 5 3/4 தேவர் தேசியப் பேரவை (கே.சி.திருமாறன்), 5 3/4 முதல் 6 தேவரின கூட்டமைப்பு (செல்லத்துரை பாண்டியன்), 6 முதல் 6 1/4 அகில இந்திய பார்வர்டு பிளாக் (பி.வி.கதிரவன்), 6 1/4 முதல் 6 1/2 அகில இந்திய மருதுபாண்டியர் கழகம் (ராஜேந்திரன்), 6 1/2 முதல் 6 3/4 அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆண்டித்தேவர், ராஜேந்திரன், 7 முதல் 7 1/4 தேவரின மறுமலர்ச்சி இயக்கம் (செந்தூர் பாண்டியன்), 7 1/4 முதல் 7 1/2 மரத்தமிழர் சேனை (புதுமலர் பிரபாகரன்), 7 1/2 முதல் 7 3/4 பசும்பொன் தேர்வு ஸ்குருசியல் யூமானிட்டி வெல்பர் அசோசியேஷன் (பூபதி ராஜா), 7 3/4 முதல் 8.00 தமிழக மக்கள் பார்வர்டு பிளாக் (எஸ்.மனோகரன்), 8 முதல் 8 1/4 தேசியவாத காங்கிரஸ் (டாக்டர் ராஜேஸ்வரன்) 8 1/4 முதல் 8 1/2 மூவேந்தர் முன்னேற்றக்கழகம் (ஸ்ரீதர் வாண்டையார்), 8 1/2 முதல் 8 3/4 முத்துராமலிங்கத்தேவர் கல்வி அறக்கட்டளை (இந்தி ராணி), 8 3/4 முதல் 9 ஸ்ரீமான் தேவர் அறக்கட்டளை (எஸ்.மனோகரன்), 9 முதல் 9 1/4 அகில இந்திய மூவேந்தர் முன்னணி (டாக்டர் சேதுராமன்), 9 1/4 முதல் 10 அமைச்சர்கள், 10 முதல் 10 1/2 அ.தி.மு.க., 10 1/2 முதல் 10 3/4 அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் (கருப்பையா, அரசகுமார்), 10 3/4 முதல் 11 காங்கிரஸ், 11 முதல் 11 1/4 தேசியவாத காங்கிரஸ் (மலைச்சாமி), 11 1/4 முதல் 11 1/2 தேசிய மறுமலர்ச்சிக்கழகம் (கார்த்திகேயன்), 11 1/2 முதல் 11 3/4 பாரதீய ஜனதா, பிற்பகல் 12 முதல் 12 1/2 தி.மு.க., 12 1/2 முதல் 12 3/4 இந்திய கம்யூனிஸ்டு, 12 3/4 முதல் 1.00 நாம் தமிழர் இயக்கம், 1 முதல் 1 1/2 ம.தி.மு.க., 1 1/2 முதல் 1 3/4 மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, 1 3/4 முதல் 2 ஜனதா கட்சி (சுப்பிரமணியசாமி), 2 முதல் 2 1/4 தமிழ்நாடு சிவசேனா (தூதை செல்வம்), 2 1/4 முதல் 2 1/2 தமிழக முக்குலத்தோர் தேவர் சமூகம் (கணேச பாண்டியன்), 2 1/2 முதல் 2 3/4 பசும்பொன் தேசியக்கழகம் (வெள்ளைச்சாமி தேவர், கோவில்பட்டி,), 2 3/4 முதல் 3 பாரதீய பார்வர்டு பிளாக் (முருகன்ஜி), 3 முதல் 3 1/4 தே.மு.தி.க., 3 1/4 முதல் 3 1/2 வல்லரசு பார்வர்டு பிளாக் (அம்மாவாசி), 3 1/2 முதல் 3 3/4 பார்வர்டு பிளாக் (தினகரன்), 3 3/4 முதல் 4.00 தமிழ்நாடு தேவர் இளைஞர் பேரவை), 4 முதல் 4 1/4 பார்வர்டு பிளாக் (நவமணி), 4 1/4 முதல் 4 1/2 தேவர் அறக்கட்டளை (பாலமுருகன், 4 1/2 முதல் 4 3/4 சரவணா நற்பணி மன்றம் தேவர் இளைஞர் நல்வாழ்வு மையம், 4 3/4 முதல் 5 தேவரின பாதுகாப்பு பேரவை, மாலை 5 மணிக்கு அரசு விழா நடைபெறுகிறது.

இத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன. ஏற்பாடுகளை கலெக்டர் அருண்ராய், டி.ஆர்.ஓ. ஜெயராமன், போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கமுதி தாசில்தார் சுகுமாறன், ஆணையாளர்கள் கந்தசாமி, சத்தியமூர்த்தி மற்றும் அதி காரிகள் செய்து வருகிறார்கள்.

No comments: