Saturday, October 29, 2011

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா நெல்லையில் தீவிர கண்காணிப்பு

திருநெல்வேலி : பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா நாளை (30ம்தேதி) நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பசும்பொன் தேவர் சிலைகள், படங்களுக்கு அனைத்து கட்சிகள், இயக்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தலைவர்கள் சிலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்ஸ்டாண்ட்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்புப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இரவு ரோந்துப்பணி மும்முரமாக நடக்கிறது.நெல்லை ஜங்ஷன் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க நாளை காலை முதல் மதியம் வரை 18 கட்சிகள், அமைப்புகளுக்கு தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு இயக்க, கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்தை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ நடத்தினார்

No comments: