Saturday, October 29, 2011

குருபூஜை துவக்கம்

கமுதி : முத்துராமலிங்க தேவர் 104 ஜெயந்திவிழா கமுதி பசும்பொன்னில் நேற்று துவங்கியது. காலை 8 மணிக்கு லட்சார்ச்சனை, கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் யாகசாலை பூஜை நடந்தது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் தலைமை வகித்தார். நிர்வாகி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வாசன் கண்மருத்துவமனை, தேவர் நினைவாலய நிர்வாகம் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது. 1008 திருவிளக்கு பூஜை, முளைப்பாரி, கரகாட்டம், சிலம்பாட்டம் நடந்தது. சுற்றுப்புற கிராமப்பகுதியினர் காவடி, ஜோதி எடுத்து வந்தனர். இரவு தேரோட்டம் நடந்தது. 5,008 பால்குட விழா: முதுகுளத்தூர் தேவர் சிலைக்கு, 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர், 5,008 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தபட்டது. ஏற்பாடுகளை மறவர் வாலிபர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

No comments: