Tuesday, October 22, 2013

144 தடை உத்தரவு ரத்து வலியுறுத்தி அக்.24-ல் மறவர் சங்கம் முக்கிய முடிவு


போலீஸ் 144 தடை உத்தரவை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்.24-ந்தேதி(வியாழக்கிழ மை) ஆப்பநாடு மறவர்கள் சங்கம் முக்கிய முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்.31 வரையிலும் போலீஸ் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதை ரத்து செய்தல், அக்.30-ல் பசும்பொன்னிற்கு வாடகை வாகனங்களில் தேவர் குருபூஜைக்கு செல்லவும், அவரவர் ஊர்களில் இருந்து தாள,வாத்தியத்துடன் தேவர் ஜோதியை தொடர் ஓட்டமாக கொண்டு வரவும் தடை விதிப்பதை ரத்து செய்தல் உள்பட பல கோரிக்கைளை சமீப நாள்களாக தேவரின சமூக அமைப்புகளும், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த 448 ஊர்கள் அடங்கிய ஆப்பநாடு மறவர் சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதையொட்டி சில ஊர்களில் சாலை மறியலும், உண்ணாவிரதமும் நடைபெற்றன. இதற்கிடையில் அக்.24-ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு குறித்து நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஆப்ப நாடு மறவர்கள் சங்கம் சார்பில் பங்கேற்பது என்றும், சுமுகமான தீ்ர்வு கிடைக்கவில்லையானால் போராட்டங்கள் நடத்துவது என்றும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்டுகிறது.

No comments: