Thursday, October 24, 2013

தேவர் குருபூஜை: பசும்பொன்னில் ஏற்பாடுகள் தீவிரம்

தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் அடிப்படை வசதி பணிகளை செய்வதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பசும்பொன் தேவரின் 51-வது குருபூஜையும், தமிழக அரசு சார்பில் 106-வது ஜெயந்தி விழாவும் அக். 30 ஆம் தேதி நடைபெறுகின்றன. இதற்காக பசும்பொன்னில் சாலைகள் சீரமைப்பு, தியான மண்டபம், மொட்டை போடுமிடம், கழிப்பறைகள், காவல் துறையினரின் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அறை, உயர் அலுவலர்கள் இருக்குமிடம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் அனைத்தும் தீவிரமாக மராமத்து செய்யப்பட்டு வருகின்றன. பசும்பொன்னிற்குள் செல்லும் சாலைகள் ஓரம் உள்ள முள் செடிகள், மரங்களை வெட்டியும், குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் கல், மண் போட்டு நிரப்பியும் சீரமைக்கப்படுகின்றன. பணிகளில் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் முத்து இளங்கோவன், வீரராகவன், பொறியாளர்கள் சங்கிலி, கணபதி சுப்பிரமணியன் மற்றும் ஓவர்சீயர்கள், சாலைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். தினசரி பசும் பொன்னிற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் த. பாலு சென்று பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். மழை தீவிரமடைவதற்குள் பசும்பொன்னில் அடிப்படை வசதிகளை செய்து முடிமாறு ஆட்சியர் க. நந்த குமார் அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார். .

No comments: