Tuesday, October 22, 2013

64 ரகசிய ஆவணங்கள் வேண்டும்:மம்தா அரசிடம் நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை

சுபாஷ் சந்திரேபோஸ் குறித்த 64 ரகசிய ஆவணங்களை எங்களிடம் தர வேண்டும் என நேதாஜியின் உறவினர்கள் மேற்கு வங்க அரசிடம் கோரிக்கை கடிதம் எழுதி அனுபபினர்.இது குறி்த்து மம்தா பானர்ஜி பதில் கடிதம் ஏதும் எழுதி அனுப்பவில்லை. நேதாஜி, தற்போதைய மேற்கு வங்கம் மாநிலத்தில் பிறந்தவர் என்பதால், அவரது மரணம் தொடர்பான தகவல்களை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் அம்மாநில முதல்வர் மம்தாவை கடந்த ஆண்டே கேட்டுக்கொண்டனர்.ஆனால், இவ்விவகாரத்தில் உதவிட அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.கொல்கட்டாவில்இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தியாகிகள் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் நேற்று வீரவணக்கம் செலுத்தினர். நேதாஜியின் உறவினர்களில் ஒருவரான சந்திரகுமார் போஸ், விழாவில் கலந்துகொண்டபின் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.அவர் கூறுகையில்,சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ரகசிய கோப்புகளை மேற்கு வங்காள அரசிடம் உள்ளது. அவை நமக்கு கிடைத்தால் அவரைப் பற்றிய ஏராளமான தகவல்களை அறிய முடியும். ஆனால், இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு நாங்கள் பலமுறை கடிதங்கள் எழுதி விட்டோம்.ஒரு கடிதத்திற்கு கூட அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. மாநில அரசே நேதாஜியின் வாழ்க்கை பற்றிய தகவல்களை அளிக்க மறுத்து விட்டால்.. மத்திய அரசிடம் இருந்து நாங்கள் எவ்வாறு பெற முடியும்? மாநில அரசும், மத்திய அரசும் நேதாஜி தொடர்பாக தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் கொடுத்துவிடவேண்டும் என்றார்.

No comments: