Thursday, October 31, 2013

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை

தேவர் வாழ்ந்த வீட்டில் அனைத்துக்கட்சியினர் மரியாதை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை,106 வது ஜயந்தி விழாவினை முன்னிட்டு, மதுரையில் அவர் வாழ்ந்து மறைந்த வீட்டில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் மரியாதை செய்தனர். திருநகர் பசும்பொன் தெருவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்து மறைந்த இல்லம் உள்ளது. அங்கு திருநகர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் ஆர்.கண்ணன், இணை இயக்குநர் எஸ்.ஜெயக்கொடி, செயலர் முத்துராமலிங்கம், பொருளாளர் கணபதி உள்ளிட்டோர் தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.தர்மராஜா தலைமையில் திட்டக்குழு உறுப்பினர் முத்துகுமார், சுகாதாரக் குழுத்தலைவர் முனியாண்டி, ஒன்றியச் செயலர் சுப்பிரமணியன், நகரச் செயலர்கள் பாலமுருகன்,பன்னீர்செல்வம், ஜெ. பேரவை முன்னாள் மாவட்டச் செயலர் மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்தியாபலராமன், நாகலெட்சுமி பாண்டுரங்கன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் நிர்மலா தேவி, துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றியக்கவுன்சிலர் இந்திராபாண்டி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திமுக சார்பில் மாவட்டச் செயலர் பி.மூர்த்தி தலைமையில், துணைச் செயலர் எம்.எல்ராஜ், தேர்தல் பணிக்குழு செயலர் சேடபட்டி முத்தையா, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார்.கோபி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் இந்திராகாந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தேமுதிக சார்பில் திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.டி.ராஜா தலைமை யில் ஒன்றிய பொருளாளர் விருமாண்டி, மாணவரணி செயலர் ரமேஷ், பகுதி செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் சார்பில் காங்கிரஸ் வட்டாரத்தலைவர் ரா.சுப்பிரமணியன் தலைமையில் இளைஞரணி தொகுதி தலைவர் காசிநாதன், வட்டாரதலைவர் மலைராஜன் ஆகியோரும், நகர் காங்கிரஸ் சார்பில் 98ஆவது வார்டு காங்கிரஸ் தலைவர் துரைநாகராஜன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். . தே.கல்லுப்பட்டியில் தேவர் ஜயந்தி. மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் புதன்கிழமை தேவர் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. தே.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள தேவர்சிலைக்கு காலையில் பெண்கள் பொங்கல் வைத்து, ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பின்பு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அன்று மாலை காரண மறவர் சேவா சங்கம் சார்பாக தேவர் ஜயந்தி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.எஸ்.ராமசாமி தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சேதுராமலிங்க பாண்டியன், அய்யாவு, முருகன், வீமராஜ், ராசய்யா ஆகியோர் சிறப்புரையாற்றினார். சங்கப் பொருளாளர் முத்தையா நன்றியுரை கூறினார் பசும்பொன்னில் அமைச்சர்கள், தி.மு.க.வினர் கார்கள் மீது கல்வீச்சு சுதந்திரப் போராட்டத் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106-வது ஜயந்தி விழாவுக்கு பசும்பொன்னுக்கு புதன்கிழமை வந்த அமைச்சர்கள் மற்றும் தி.மு.க.வினர் மீது கூட்டத்தினர் கல்வீசித் தாக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா நடைபெற்றது. இதையடுத்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. பசும்பொன்னுக்குச் செல்லும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.வைத்திலிங்கம், காமராஜ் ஆகியோர் கட்சியினருடன் அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினர். அப்போது அங்கிருந்தவர்கள், திடீரென அமைச்சர்களின் கார்களை நோக்கி சேற்றையும், கற்களையும் வீசினர். சேறானது அமைச்சர் வைத்திலிங்கத்தின் கார் மற்றும் பாதுகாவலர்கள் மீது விழுந்தது. மேலும், அதிமுக முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் முருகனின் கார் கண்ணாடி உடைந்தது. அதிமுக கொடிகள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸார் கூட்டத்தினரை விரட்டியடித்தனர். நினைவிடத்துக்கு வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவேற்க கட்சிக் கொடி கட்டிய கார்களில் தி.மு.க. பிரமுகர்கள் வந்தனர். அவர்களை நோக்கி திடீரென கூட்டத்திலிருந்தோர் கல் வீசியதில், வழக்குரைஞர் முனியசாமி, கீழக்குளம் ஊராட்சித் தலைவர் சண்முகம் உள்ளிட்ட 6 பேரின் கார் கண்ணாடிகள் சேதமடைந்தன. போலீஸார் கல் வீசியவர்களை விரட்டியடித்தனர். கமுதி அருகே உள்ள முஷ்டக்குறிச்சி கிராமத்திலிருந்து ஒன்றிய அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் எஸ்.பி. ரவி மற்றும் வெள்ளைப்பாண்டி, கந்தவேல், செல்லப்பெருமாள், முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் பசும்பொன்னுக்கு தேவர் ஜோதி கொண்டு வரப்பட்டது. பசும்பொன், தீóர்த்தம்மாள் ஆகிய பெண்கள் ஜோதியை ஏந்தி வந்தனர். ஆனால், ஜோதியை போலீஸார் அனுமதிக்க மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின், ஜோதியை போலீஸார் அனுமதித்தனர். தேவர் நினைவிடத்துக்கு கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் அரசு 144 தடை உத்தரவை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும், தடுப்புகளை மீறி கூட்டமாக சிலர் வந்ததால் அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். கூட்டத்தினர் போலீஸாரை நோக்கி கல் வீசினர். இதில் பட்டாலியன் போலீஸ்காரர் முனியாண்டியின் மூக்கில் காயமேற்பட்டது. பாரா மோட்டரிங்க் மூலம் கூட்டம் கண்காணிக்கப்பட்டது. கல்வீச்சு சம்பவத்தால் மாலையில் நடந்த அரசு விழாவுக்கு வந்த அமைச்சர்களுக்கு மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பழனியில் தேவர் குருபூஜை பழனியில் பசும்பொன் தேவரின் 106 ஆவது ஜயந்தி மற்றும் குருபூஜை புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அடிவாரம் பாளையம் அருகே உள்ள தேவர் உருவச் சிலைக்கு, அகில இந்திய தேவர் பேரவை, தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞரணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அபிஷேகம் செய்து, மாலைகள் அணிவித்து தீபாராதனைக் காண்பித்து வழிபட்டனர். முன்னதாக ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு, சிலைக்கு படையல் வைத்து வழிபாடு நடத்தினர். இதில், அகில இந்திய தேவர் பேரவை மாவட்டப் பொருளாளர் சோலைத் தேவர், நகரச் செயலர் ரத்தினம், பொருளாளர் முருகானந்தம், மகளிரணி ராஜேஸ்வரி, பத்மா, தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி, கெüரவ ஆலோசகர் பாஸ்கரன், நகரத் தலைவர் கோபி, வழக்குரைஞர் கார்த்திக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மதுரையில் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம். தேவர் ஜயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஆயிரக்கணக்கானோர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலை பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுரை காமராஜர் சாலை, வாழைத்தோப்பு, கீரைத்துறை மற்றும் செல்லூர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் முளைப்பாரி, பால்குடம் ஏந்திவந்து தேவர் திருவுருவச் சிலையை வணங்கினர். செல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தேவர் சிலை முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து கீரைத்துறை பிள்ளையார் கோயில், நாகுமுத்துப்பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், முளைப்பாரி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோரிப்பாளையத்துக்கு வந்தனர். அங்கு முளைப்பாரியை தேவர் சிலை முன்பு வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் பால்குடத்திலிருந்த பாலை தேவர் சிலைமீது ஊற்றி பாலாபிஷேகம் செய்து வணங்கினர். இதேபோல, திமுக பிரமுகர் அட்டாக்பாண்டி ஆதரவாளர்கள் மற்றும் தேசிய பார்வர்டு பிளாக் முருகன்ஜி, பார்வர்டு பிளாக் பசும்பொன்முத்தையா உள்ளிட்டோரும் ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், பாலாபிஷேகம் செய்தும் வணங்கினர். ஊர்வலமாக வந்த ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை வைகை ஆற்றில் கரைத்துவிட்டுச்சென்றனர். தேவர் சிலைக்கு மாலை அணிவிப்போர் பின்பக்கம் ஏறிவந்து முன்பக்கமாக இறங்கும் வகையில் கம்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சிலை முன்பு வஜ்ரா பாதுகாப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. தேவர் அனைவருக்கும் பொதுவான தேசியத் தலைவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான தேசியத் தலைவர் என பசும்பொன்னில் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். சுதந்திரப் போராட்டத் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106-வது ஜயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச் செயலர் வைகோ: நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் தேவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தென் மண்டலத் தளபதியாக வலது கரமாகத் திகழ்ந்தவர். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடி பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தீரர். தேவர் சாதித் தலைவர் அல்லர். அனைவரும் ஏற்கத்தக்க தலைவராவார். தலித்துகள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்லும் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாதய்யர் நடத்தியபோது, அதற்குப் பாதுகாப்பாகத் திகழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர். தேவர் இன்று இருந்திருந்தால் ஈழத் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவளித்திருப்பார் என்றார். பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராஜாகிருஷ்ணன்: பசும்பொன் தேவர் வலிமை மிக்க பாரதம் உருவாகவே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். நரேந்திர மோடி பிரதமராவது தேவரிóன் நினைவை நனவாக்கும். மோடி பிரதமரானதும் தேவர் ஜயந்திக்கு நிச்சயம் அழைத்து வருவோம். தேசியத் திருவிழாவாக தேவர் ஜயந்தி எதிர்காலத்தில் நடத்தப்படும் என்றார். காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்: பசும்பொன்னில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு எனது மக்களவை உறுப்பினர் நிதியை அளித்துள்ளேன். தேசியத் தலைவரான தேவர் ஜயந்திக்கு அளித்த பாதுகாப்பு வரவேற்புக்குரியது என்றார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்: இந்துத் தாய் வயிற்றில் பிறந்து, இஸ்லாமியத் தாயால் வளர்க்கப்பட்டு, கிறிஸ்தவ ஆசிரியரிடம் பாடம் பயின்றவர் தேவர். அதனால் சமூக ஒற்றுமைக்குப் போராடிய மாவீரர். அவர் புகழைப் போற்றும் வகையிலே திமுக ஆட்சியில் 3 கல்லூரிகளுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. நினைவிடம் அமைத்து அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவரது விழாவுக்கு தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது சரியல்ல. மாநிலத்தில் எழுத்து, பேச்சு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூட அனுமதி மறுப்பது சரியல்ல என்றார். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி: தேவர் ஜயந்தியை தென் மாவட்ட மக்கள் தெய்வ வழிபாடாகவே நடத்தி வருகின்றனர். தேசியத் தலைவரான தேவர் விழாவுக்கு 144 தடை உத்தரவு சரியல்ல. தேவரின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றார். நடிகர் கருணாஸ்: பாபா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் போலவே தேவர் நினைவிடமும் திகழ்கிறது. சித்தராக வாழ்ந்து மறைந்த தேவரை தெய்வமாகவே கருதுகிறோம். அவரது விழா எப்போதும் போல நடக்க அரசு உதவ வேண்டும் என்றார். . சிதம்பரத்தில் தேவர் ஜெயந்தி விழா. சிதம்பரம் மந்தகரையில் நரேந்திர மோடி எழுச்சி பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 106வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பேரவைத் தலைவர் ஜி.தண்டபாணி முன்னிலை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில், அனைத்து இளைஞர்களும் கட்டாயம் தேவர் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். செயலாளர் ரவி வரவேற்றார். அலங்கரிக்கப்பட்ட தேவர் படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பாரத யுவ பரிஷத் அமைப்பு பொருளாளர் குருமூர்த்தி, மநத்கரை மணி, சிவக்குமார், கண்ணன், முருகன், சொக்கநாதன், சுரேஷ், புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சுதேசி பொருள்களை வாங்க வேண்டும், ரத்ததானம் செய்ய வேண்டும் என இளைஞர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரவை செயலாளர் ரவி நன்றி கூறினார். . மானாமதுரையில் தேவர் சிலைக்கு அஞ்சலி சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள தேவர்சிலைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். தேவர் ஜயந்தியையொட்டி சுந்தரபுரம் வீதியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலை அலங்கரிப்பட்டிருந்தது. விளாக்குளம், கீழமேல்குடி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஊர்வலமாக பால்குடம் சுமந்து வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தி வழிபட்டனர். பசும்பொன் கிராமத்துக்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மானாமதுரை சுந்தரபுரம் வீதியை கடந்து சென்றவர்கள் தேவர்சிலைக்கு மாலைகள் அணிவித்து வணங்கிச் சென்றனர். . தேவர் ஜயந்தி: நெல்லையில் மாலை அணிவிப்பு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. முதலாவதாக அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர துணை மேயர் ஜெகநாதன் தலைமையில் கட்சியினர் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். பாஜக சார்பில், மாவட்டத் தலைவர் கட்டளை எஸ். ஜோதி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் ஏ. முகமது அலி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், மாநகர் மாவட்டச் செயலர் சுந்தர்ராஜ பண்ணையார் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலர் எம். கண்ணன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற மறுமலர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஏ.வேல்முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். . கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர், எட்டயபுரம் ஆகிய பகுதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நகரச் செயலர் சங்கரபாண்டியன் தலைமையில், தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத் தலைவர் ராமர், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெமினி என்ற அருணாசலசாமி, இருளப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயலர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னதாக, சங்கரலிங்கபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னதானத்தை தொடங்கிவைத்தார். திமுக சார்பில் மாவட்டச் செயலர் பெரியசாமி தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில்பட்டி நகரச் செயலர் ராமர், ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், முன்னாள் ஊராட்சித் தலைவர் பச்சமால், முன்னாள் நகரச் செயலர் கருணாநிதி, முன்னாள் ஒன்றியச் செயலர் பா.மு.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் தலைவர் ராஜகோபால் தலைமையில், நகர காங்கிரஸ் துணைத் தலைவர் பால்ராஜ் மாலை அணிவித்தார். தேமுதிக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் பொன்ராஜ் தலைமையில், தேமுதிகவினர் மாலை அணிவித்தனர். மதிமுக சார்பில் மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ஜி.ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்தனர். அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டச் செயலர் சிவந்திநாராயணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இனாம்மணியாச்சியிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக வந்து தேவர் சிலை முன் வைக்கப்பட்டிருந்த சிறிய தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். வீரவாஞ்சி நகர் முக்குலத்தோர் சமுதாய சங்கம் சார்பில் நடைபெற்ற பால்குட ஊர்வலத்துக்கு சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் எஸ்.செல்வம் பால்குட ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். அகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பு சார்பில் இலுப்பையூரணியில் 501 முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. கயத்தாறு, கழுகுமலை ஆகிய பகுதிகளிலும் தேவர் ஜயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர்: காருகுறிச்சி தேவர் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற தேவர் ஜயந்தி விழாவுக்கு, சங்க துணைத் தலைவர் ஆர்.சின்னத்துரைபாண்டியன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முருகன், பி.சங்கரலிங்கம், கே.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், தொழிலதிபர் எம்.கதிரேசப்பாண்டியன், வி.ராஜபாண்டியன் உள்ளிட்டோர் முத்துராமலிங்கத்தேவரின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சங்க மேலாளர் எ.கந்தன் நன்றி கூறினார். சாத்தான்குளம்: சாத்தான்குளம் நகர தேவர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக் பேரவை, நேதாஜி கிரிக்கெட் கிளப், வேலுநாச்சியார் பேரவை, கௌதம்கார்த்திக் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் சார்பில் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் ஏ. முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய ஜெயலலிதா பேரவைத் தலைவர் எஸ். தங்கபாண்டி, முன்னாள் தேவர் பேரவைச் செயலர் சின்னத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பார்வர்டு பிளாக் கட்சி ஒன்றியச் செயலர் ஏ. முருகன் வரவேற்றார். வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்றத் தலைவர் கணபதி கொடியேற்றினார். பின்னர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவர் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேவர் பேரவை நகரத் தலைவர் வி. முருகன், பார்வர்டு பிளாக் கட்சி நகரச் செயலர் சுடலை, பிரதிநிதி ரமேஷ் மற்றும் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எட்டயபுரம்: தெற்குத்தெரு மறவர் சங்கத் தலைவர் திலகாருண்யம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் கோவிந்தராஜபெருமாள் முன்னிலை வகித்தார். எராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பால்குடங்கள் எடுத்துக்கொண்டு நகரின் நான்கு ரதவீதி வழியாக ஊர்வலமாக வந்து அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர முக்குலத்தோர் சங்கம் சார்பில் மாயவன் மற்றும் அனைத்துக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். .

No comments: