Sunday, October 6, 2013

96ல் அரசியலுக்கு வந்திருந்தால் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் ரஜினி விருது கொடுத்திருப்பார்.


திரைப்பட நூற்றாண்டு விழாவில் ரஜினிக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. தலைவரை அவ மானப்படுத்தியவர்களுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் கற் பிக்க ரஜினி மன்ற சீனியர் நிர்வாகிகள் சிலர் ரகசிய கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். ரஜினி ரசிகர் மன்ற வட்டாரத்தில் இது சம்பந்தமாக விசா ரித்தோம். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மன்றத் தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பால.நமச்சிவாயத்திடம் பேசினோம். ''தலைவ​ருக்காகக் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தி​யவர்கள்தான் நாங்கள். ஏன் அவ ருக்காக உயிரையும் கொடுப்போம். இப்போது அவரைப்போலவே ரொம்ப பக்குவப்பட்டு விட்டோம். அன்றைக்கு திரைப்பட நூற்றாண்டு விழாவில் தலைவர் மட்டுமா அவமதிக்கப்பட்டார்? நாட்டின் ஜனாதிபதியே அவமதிக்கப்பட்டிருக்கிறார். பல சீனியர் கலைஞர்களையும், காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைக் கொடுத்தவர்களும் புறக் கணிக்கப்பட்டிருக்கிறார்கள். சினிமாவே தயாரிக்காத கேயாருக்கும், சூப்பர் ஸ்டார் உச்சத்தில் இருக்கும்போது திரைப்படத் துறைக்கு வந்த விக்ரமனுக்கும், சீனியர்களை பின்னுக்கு தள்ளுகிறோமே என்ற குற்ற உணர்வு இல்லை. 96-ம் ஆண்டு தேடிவந்த முதல்வர் பதவி வாய்ப்பை அப்போதே சூப்பர் ஸ்டார் ஏற்றுக்கொண்டிருந்தால், இதேவிழாவில் முன்னாள் கலைஞர்கள் என்ற அடிப்படையில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் அவர் விருது கொடுத்திருப்பார். மறுபடியும் காலம் வரும். அவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கும். இதைக் கண்டித்து போஸ்டர் ஒட்டுவதாலோ, ஆர்ப்பாட்டம் நடத்துவதாலோ அதுவும், இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கப் போவதில்லை. ஆனால், இந்தநிலை இப்படியே தொடராது. வரும் தேர்தலில் ரஜினி ரசிகர்கள், இதற்கான பதிலைக் கொடுப்பதற்கு ஆலோசனைசெய்து வருகிறோம். இந்த ஆலோசனை விவரங்கள் தலைவர் கவனத்துக்குப் போய், அவர் ஒப்பு தலுடன் அடுத்த அதிரடி ஆரம்பமாகும்'' என்றார்.

No comments: