Tuesday, October 29, 2013

பசும்பொன் தேவர் குரு பூஜை விழா 2-ம் நாள் நிகழ்ச்சி: தேவருக்கு பூஜை வழிபாடு பக்தி பரவசம்

பசும்பொன் தேவரின் 51-வது குருபூஜை, 106-வது ஜெயந்தி முப்பெரும் விழா முன்னிட்டு கமுதி அருகே பசும்பொன் னிற்கு இன்று(செவ்வாய்க்கிழமை) காலை முதல் தேவரின மக்கள் பல ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் தேவரின மக்கள் வெள்ளமாக பசும்பொன் காட்சி அளித்தது. தேவர் நினைவாலயத்தில் மக்கள் பக்தி பரவசத்துடன் பூஜைகள் நடத்தி, வழிபட்டுச் செல்கின்றனர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் மறைந்த உ.முத்துராமலிங்க தேவர் என்னும் பசும்பொன் தேவரின் 106-வது ஜெயந்தி விழாவும், 51-வது குரு பூஜை முப்பெரும் விழாவும் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்தில் நேற்று(திங்கள் கிழமை) காலை மங்கள இசையுடன் தொடங்கியது. கோவை-காமாட்சிபுரி ஆதீனம், குரு மகா சன்னிதானம், மவுனகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் லட்சார்ச்சனை நடத்தி தேவர் விழா வைத் துவக்கி வைத்தார். கோவை-காமாட்சிபுரி உதவி ஆதீனம் தம்பிரான் மூர்த்தி சுவாமிகள் மற்றும் ஆதீன குழுவி னர் தொடர்ந்து இன்றும்(செவ்வாய்க்கிழமை) 2-ம் நாள் காலையில் லட்சார்ச்சனையை தொடர்ந்து நடத்தினார்கள். பகலில் லட்சார்ச்சனை தேவர் நினைவாலய பொறுப்பாளர் த.காந்தி மீனாள் நடராஜன் முன்னிலையில் நிறைவு பெற் றது. காலை முதல் தமிழ் நாடு முழுவதும் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேவரின மக்கள் பல ஆயிரக்ணக்கானோர் பசும்பொன்னிற்கு வந்த வண்ணம் உள்ளனர். பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் தொடர்ந்து தீப ஆராதனை பூஜையை கணக்கி தென்னந்தோப்பு புற்றுக்கோவில் சாமியார் நீ,ராமச்சந்திரன், சு.ராமநாதன் நடத்தினர். தேவரின மக்கள் ஆயிரக்கணக்கானோர் தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டுச் சென்றார்கள். பெண்கள் பலரும் குடும் பத்தினருடன் வந்து பொங்கல் வைத்து சாமி கும்பிட்டார்கள். ஆயிரக்ணக்கானோர் மொட்டை போட்டு, முடி காணிக்கை செலுத்தினர். சில ஊர்களைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பால் குடம், முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக தேவர் நினைவாலயத்திற்கு வந்து செலுத்தினர். அக்கினி சட்டி எடுத்து வந்தும், வேல் குத்தி வந்தும் பக்தியுடன் சாமி கும்பி ட்டு வருகிறார்கள். தேவர் சிலைக்கு பால் அபிசேகம் செய்து பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை முதல் தேவரின மக்கள் வெள்ளமாய் பசும்பொன் காட்சி அளிக்கிறது. தேவர் நினைவாலயத்தில் பக்தி பரவசமாய் வணங்கிச செல்கிறா ர்கள். முப்பெரும் விழா முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவாலய வளாகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டுள்ளது. பசும்பொன் தெருக்களிலும், பசும்பொன் விலக்கு சாலையிலும் வண்ண மின் அலங்கார விளக்குகள், தே வர் உருவ வண்ண மின் விளக்குகளுடன் கூடிய கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கமுதி-கோட்டைமேட்டிலும், தேவர் சிலை வளாகத்திலும் பசும்பொன் தேவர் குரு பூஜை விழாவை பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப் படுகிறது. இதே போன்று கமுதி பஸ் நிலையம் முன்பாக உள்ள பசும்பொன் தேவர் சிலை மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு, தேவர் விழா நடைபெற்று வருகிறது. பல இடங்களிலும் தேவர் புகழ் பாடல்கள் ஒலிபரப்பப்ட்டு வருகிற து. இதனால் பசும்பொன், கோட்டை மேடு, கமுதி ஆகிய இடங்கள் தேவர் திருவிழா கோலமாக காட்சி அளிக்கிறது. கமுதி பஸ் நிலையம் முன்பாக உள்ள தேவர் சிலை வளாக்தில் இருந்து தேவரின இளைஞர்கள் மேள,தாளத்துட ன் தேவர் ஜோதியை ஊர்வலமாக பசும்பொன் தேவர் நினைவாலயத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.மேலும் பால் குடம் பவனியும், முளைப்பாரி பவனியும் புறப்பட்டுச் செல்கின்றன.. இன்று பகல் முதல் தேவரின அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பசும்பொன் தேவர் நினைவாலய த்திற்கு வந்து வணங்கிச் சென்றார்கள். இவர்களில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவரும், தமிழக பொது்சசெயலாளருமான பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ, மற்றொரு அணி பொது செயலாளர் எல்.சந்தானம்(முன்னாள் எம்.எல்.ஏ), மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.. ஆண்டி தேவர் அணியின் நிர்வாகிகள், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர், மருத்துவர் மு.சேதுராமன், தமிழ் நாடு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி. எம்.ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் முருகன்ஜி, சண்முகையா பாண்டியன், உள்பட பலரும் முக்கியமானவர்கள் ஆவர். நாளை(புதன் கிழமை) காலை 6 மணியளவில் பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் 51-வது குருபூஜை நடைபெறு கிறது. கோவை-காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், உதவி ஆதீனம் மூர்த்தி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தங்களது ஆதீன குழுவினருடன் குரு பூஜையை நடத்துகிறார்கள். 31 அபிசேகங்களுடன் நடைபெறும் குரு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். நாளையும் காலை முதல் மாலை வரையிலும் தேவரின மக்கள் அலை,அலையாக பசும்பொன்னிற்கு வந்து சாமி கும்பிட்டுச் செல்கிறார்கள். இது தவிர பல்வேறு அரசியல் கட்சிகளை ச் சேர்ந்த தலைவர்கள் பலரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தி்ல் பசும்பொன் தேவர் நினைவாலயத்திற்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள். இவர்களில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொது செயலர் வை.கோ. போன்றவர் கள் முக்கியமானவர்கள் ஆவர். முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர், பிரபல சிரிப்பு நடிகர் கருணாஸ் தனது ஆதரவாளர்களுடன் வருகிறார். தி.மு.க.. சார்பில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் பசும்பொன் தேவர் நினைவாலயத்திற்கு வந்து வணங்குகிறார்கள். பின்னர் மாலையில் மாவட்ட ஆட்சியர் க,.ந்தகுமார் தலைமையில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் பசும்பொன் தேவரின் 106-வது ஜெயந்தி விழாவிலும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். அப்போது தேவர் உருவப்படத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை அப்போது அமைச்சர்கள் வழங்குகிறார்கள். .

No comments: