Friday, October 11, 2013

ராமேசுவரத்தில் தேவர் சிலை அவமதிப்பு

ராமேசுவரம் என்.எஸ்.கே. வீதியில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராமேசுவரம் என்.எஸ்.கே. வீதியில் முத்துராமலிங்கதேவர் சிலை உள்ளது. 5 அடி உயரமுள்ள இந்த சிலையை செவ்வாய்க்கிழமை இரவு சமூகவிரோதிகள் சிலர் அவமதிப்பு செய்துவிட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்த ராமேசுவரம் கோயில் காவல் நிலைய போலீஸார் சிலையை சுத்தம் செய்தனர். சிலை அவமதிப்பு காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனுஷ்கோடி, வேர்க்காடு, கோதண்டராமர் கோயில், ரயில் நிலையம் செல்லும் நகர் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ராமேசுவரம் துணை கண்காணிப்பாளர் ஞானராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலையை அவமதிப்பு செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. .

No comments: