Thursday, October 30, 2014

107–வது பிறந்தநாள்: பசும்பொன் தேவர்


107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், முத்து ராமலிங்க தேவரின் 107–வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடத்தப்பட்டது. பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் 3 நாட்கள் இந்த விழா நடைபெற்றது. முதல் நாள் ஆன்மீக விழா கொண்டாடப்பட்டது. 2–வது நாளான நேற்று தேவரின் அரசியல் விழா நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) குருபூஜை நடைபெற்றது. நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் காலையிலேயே தேவர் நினைவிடத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவ லிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 9.45 மணிக்கு பசும்பொன் சென்றார். தொடர்ந்து 9.55 மணிக்கு அவர் தேவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, காமராஜ், சுந்தர்ராஜ், செந்தூர்பாண்டியன், உதயகுமார், விஜயபாஸ்கர், வாரியத் தலைவர்கள் முருகையா பாண்டியன், தங்கமுத்து, பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, மாவட்ட செயலாளர் தர்மர் மற்றும் பலர் மரியாதை செலுத்தினர். இதனை முன்னிட்டு பசும்பொன்னில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். குற்றங்களை தடுக்கும் வகையில் 2 ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் 9 மாணவர்கள் அடங்கிய 3 குழுவினர் இந்த விமானங்களை இயக்கினர். முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட குட்டி விமானங்கள் வான்வெளியில் 100 மீட்டர் உயரத்தில் பறந்து முதுகுளத்தூர் டவுன் மற்றும் அருகில் உள்ள கிராம பகுதிகளை கண்காணித்தது. பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் இன்று குருபூஜையை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குருபூஜைக்கு வந்து செல்ல வாகன வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டு அந்த வழியாகவே வாகனங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன

1 comment:

Anonymous said...

O Panneerselvam is at a respected position in the government from thevar community. Thirunavukkarasar is the Secretary of All India Congress Committee. He is the only person from Thervar community to occupy such a high position in a political party. Both need to be projected. But, we give importance to leaders of all other communities. The news about both OPS and Thirunavukkarasar should be prominent.