Tuesday, October 1, 2013

மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க கூட்டம்

தியாகி மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்க செயற்குழு கூட்டம் முகவைஊருணி மேல்கரையில் உள்ள சேதுபதி இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சேதுபதி மக்கள் இயக்க தலைவர் சி.சுந்தரசாமித் தேவர் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் நேதாஜி, பொன்பட்டாபி ராமசாமி, துணைச் செயலர்கள் காசிநாதன், சுப்பிரமணியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் எஸ்.கோபால் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் சிலையை தமிழக முதல்வர் நேரில் வந்து திறந்து வைக்க வர வேண்டும்,ராமநாதபுரம் மூலக்கொத்தளம் கோட்டையை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும், ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் ராமேசுவரம் ரயிலுக்கு சேது எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட வேண்டும், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் வீரமரணம் அடைந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ள மாமன்னரின் திருவுருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. .

No comments: